தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3375

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

(அல்லாஹ் கூறுகிறான்:)

மேலும், லூத்தை நாம் அனுப்பினோம். நினைவு கூருங்கள்: அவர் தம் சமூகத்தாரிடம், நீங்கள் உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டே ஒழுக்கக் கேடான செயல்களைச் செய்கிறீர்களா? பெண்களை விட்டுவிட்டு, காம உணர்வைத் தீர்த்துக் கொள்ள ஆண்களையா தேடியலைகிறீர்கள்?

உண்மையில் நீங்கள் மிக அறிவீனமான செயல் புரியும் மக்கள் ஆவீர் என்று சொன்னார். ஆயினும், அவருடைய சமூகத்தாரின் பதில், லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றுங்கள். இவர்கள் பெரிய பரிசுத்தவான்கள் என்பதாகவே இருந்தது.

இறுதியில் லூத்தையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றிக் கொண்டோம்; அவருடைய மனைவியைத் தவிர! அவளை நாம் பின் தங்கியவர்களில் ஒருத்தியாக முடிவுசெய்து விட்டிருந்தோம். மேலும் அந்த மக்களின் மீது ஒரு மழையைப் பொழியச் செய்தோம். அது எச்சரிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் கெட்ட மழையாய் இருந்தது. (27:54-58)

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லூத்(அலை) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! அவர்கள் பலமான ஓர் ஆதரவாளனிடமே புகலிடம் தேடுபவர்களாயிருந்தார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 60

(புகாரி: 3375)

بَابُ {وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الفَاحِشَةَ وَأَنْتُمْ تُبْصِرُونَ. أَئِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ تَجْهَلُونَ. فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ. فَأَنْجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ قَدَّرْنَاهَا مِنَ الغَابِرِينَ. وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فَسَاءَ مَطَرُ المُنْذَرِينَ “} [النمل: 55]

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«يَغْفِرُ اللَّهُ لِلُوطٍ، إِنْ كَانَ لَيَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.