தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3376

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

(அல்லாஹ் கூறுகிறான்:) பிறகு, அந்தத் தூதர்கள் லூத்திடம் வந்த போது, நீங்கள் அறிமுகமற்றவர்களாய் இருக்கிறீர்களே என்று லூத் கூறினார். அதற்கு அவர்கள் கூறினார்கள்: இல்லை. எதனைக் குறித்து இவர்கள் சந்தேகம் கொண்டிருந்தார்களோ அதனையே நாங்கள் கொண்டு வந்திருக்கின்றோம். நாங்கள் சத்தியத்துடன் உங்களிடம் வந்திருக்கின்றோம். நாங்கள் உண்மையைத் தான் சொல்கிறோம்.

எனவே, நீங்கள் இரவு சற்று இருக்கும் போதே உங்கள் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு வெளியேறி விடுங்கள். மேலும்,நீங்கள் அவர்களைப் பின் தொடர்ந்தே செல்லுங்கள்! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்! எங்கு செல்லுமாறு உங்களுக்குக் கட்டளையிடப்படுகின்றதோ அங்கு நேராகச் செல்லுங்கள். மேலும்,விடிவதற்குள் இவர்கள் அனைவரும் வேரோடு அழிக்கப்பட்டு விடுவார்கள் என்ற நமது இந்த முடிவை நாம் திட்டவட்டமாக அவருக்கு அறிவித்து விட்டோம்.

(இதற்குள்ளாக) ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாக லூத்தின் இல்லம் வந்(து சூழ்ந்)தனர். லூத் கூறினார்: (சகோதரர்களே!) இ(ந்தச் சிறு)வர்கள் என்னுடைய விருந்தாளி (வானவர்)கள். என்னை அவமானப்படுத்தி விடாதீர்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னை இழிவுபடுத்தி விடாதீர்கள்! அதற்கு அவர்கள், ஊர் உலகத்துக்கெல்லாம் நீர் வக்காலத்து வாங்க வேண்டாமென்று நாம் பலமுறை உம்மைத் தடுக்கவில்லையா? என்றார்கள்.

அதற்கு லூத், நீங்கள் எதையும் செய்தே தீர வேண்டுமென்றால் இதோ என்னுடைய பெண் மக்கள் இருக்கின்றனர்! என்று கூறினார். (நபியே!) உம்முடைய உயிர் மீது ஆணையாக! சந்தேகமின்றி அவர்கள் ஒருவித மான மயக்கத்தில் சிக்கி, அதில் தங்களை மறந்து தட்டழிந்து கொண்டிருந்தார்கள். இறுதியில் விடியும் வேளையில் பயங்கரமான பேரோசை ஒன்று அவர்களைத் தாக்கியது! மேலும், நாம் அவ்வூரைத் தலைகீழாகப் புரட்டினோம்; அவர்கள் மீது சுடப்பட்ட கற்களைப் பொழியச் செய்தோம். திண்ணமாக, இந்நிகழ்ச்சியில் நுணுக்க மாய் சிந்திப்பவர்களுக்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும்,இந்த (நிகழ்ச்சி நடை பெற்ற) இடம் முதன்மைச் சாலையிலேயே அமைந்துள்ளது. நிச்சயமாக நம்பிக்கையாளர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. (15:61-77)

 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், ‘அறிவுரை பெறுபவர் எவரேனும் உண்டா?’ என்னும் (54-வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள) இறைவசனத்தை ஓதினார்கள்.
Book : 60

(புகாரி: 3376)

بَابُ {فَلَمَّا جَاءَ آلَ لُوطٍ المُرْسَلُونَ، قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُنْكَرُونَ} [الحجر: 62]

{بِرُكْنِهِ} [الذاريات: 39]: «بِمَنْ مَعَهُ لِأَنَّهُمْ قُوَّتُهُ»، {تَرْكَنُوا} [هود: 113]: «تَمِيلُوا فَأَنْكَرَهُمْ وَنَكِرَهُمْ وَاسْتَنْكَرَهُمْ وَاحِدٌ»، {يُهْرَعُونَ} [هود: 78]: «يُسْرِعُونَ»، {دَابِرٌ} [الأنعام: 45]: «آخِرٌ»، {صَيْحَةٌ} [يس: 29]: «هَلَكَةٌ»، {لِلْمُتَوَسِّمِينَ} [الحجر: 75]: «لِلنَّاظِرِينَ»، {لَبِسَبِيلٍ} [الحجر: 76]: «لَبِطَرِيقٍ»

حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.