உர்வா(ரஹ்) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களிடம், ‘(நிராகரிக்கும்) மக்கள் இனி நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று இறைத்தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறை உதவி வருமென்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும் கூட)க் கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது’ என்று அல்லாஹ் கூறினான். (திருக்குர்ஆன் 12:110)
இவ்வசனத்தில் மூலத்தில் (‘பொய்யுரைக்கப்பட்டது’ என்பதைக் குறிப்பதற்குரிய சொல்லை) ‘குத்திபூ’ – தாம் பொய்ப்பிக்கப்பட்டு விட்டோம் (என இறைத் தூதர்கள் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது ‘குதிபூ’ – மக்கள் தங்களிடம் பொய்யுரைக்கப்பட்டது (எனக் கருதலானார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? என்று கேட்டேன்.
‘ ‘குத்திபூ’ (தாம் பொய்யிக்கப்பட்டு விட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றே ஓத வேண்டும்)’ என்று ஆயிஷா(ரலி) பதிலளித்தார்கள்.
உடனே, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களின் சமுதாயத்தினர் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் ‘ழன்னூ’ – நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்று தானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகிறவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)’ என்று கேட்டேன்.
அதற்கு ஆயிஷா(ரலி),
‘அன்பு (மகனே) உர்வா! அதை அவர்கள் உறுதியாக நம்பத்தான் செய்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், ‘ழன்னூ’ என்பதற்கு நபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ளவேண்டும்; சந்தேகித்தார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது) என்று பதில் கூறினார்கள்.
உடனே, ‘கத் குதிபூ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபிமார்கள் கருதலானார்கள்)’ என்று இருக்கலாமோ?’ என கேட்டேன்.
அதற்கு ஆயிஷா(ரலி) கூறினார்:
அல்லாஹ் காப்பாற்றட்டும். நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை. .
இந்த வசனத்தின் பொருளாவது: இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தினர், தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்ற மார்க்கவழியில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்து கொண்டே போய், இறை உதவியும் வரத் தாமதமாகிக் கொண்டிருந்த அந்த நிலையில் தான்… அந்த இறைத்தூதர்கள் தம் சமுதாயத்தினரில் தம் செய்தியைப் பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள் கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும் துன்ப துயரங்கள் நீண்ட கொண்டே சென்ற காரணத்தாலும்) நம்முடைய செய்தியைப் பொய்யென்று கருதுகிறார்கள் என்றும் அவர்கள் எண்ணலானார்கள்’
மேலும், அல்லாஹ் கூறினான்:
யூசுஃபிடம் அவர்கள் நம்பிக்கையிழந்து விடவே, அவர்கள் எல்லாரும் தனியாகச் சென்று ஆலோசனை செய்தார்கள். (திருக்குர்ஆன் 12:80) மேலும், காண்க: இறைவசனம் – 12:87
Book :60
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عُرْوَةُ
أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَرَأَيْتِ قَوْلَهُ: (حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِّبُوا) أَوْ كُذِبُوا؟ قَالَتْ: «بَلْ كَذَّبَهُمْ قَوْمُهُمْ» ، فَقُلْتُ: وَاللَّهِ لَقَدِ اسْتَيْقَنُوا أَنَّ قَوْمَهُمْ كَذَّبُوهُمْ، وَمَا هُوَ بِالظَّنِّ، فَقَالَتْ: «يَا عُرَيَّةُ لَقَدِ اسْتَيْقَنُوا بِذَلِكَ»، قُلْتُ: فَلَعَلَّهَا أَوْ كُذِبُوا، قَالَتْ: ” مَعَاذَ اللَّهِ، لَمْ تَكُنِ الرُّسُلُ تَظُنُّ ذَلِكَ بِرَبِّهَا، وَأَمَّا هَذِهِ الآيَةُ، قَالَتْ: هُمْ أَتْبَاعُ الرُّسُلِ، الَّذِينَ آمَنُوا بِرَبِّهِمْ وَصَدَّقُوهُمْ، وَطَالَ عَلَيْهِمُ البَلاَءُ، وَاسْتَأْخَرَ عَنْهُمُ النَّصْرُ، حَتَّى إِذَا اسْتَيْأَسَتْ مِمَّنْ كَذَّبَهُمْ مِنْ قَوْمِهِمْ، وَظَنُّوا أَنَّ أَتْبَاعَهُمْ كَذَّبُوهُمْ، جَاءَهُمْ نَصْرُ اللَّهِ ” قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” {اسْتَيْأَسُوا} [يوسف: 80] اسْتَفْعَلُوا، مِنْ يَئِسْتُ مِنْهُ مِنْ يُوسُفَ، {لاَ تَيْأَسُوا مِنْ رَوْحِ اللَّهِ} [يوسف: 87] مَعْنَاهُ الرَّجَاءُ
சமீப விமர்சனங்கள்