பாடம் : 25 இஸ்லா(த்தின் கால)த்தில் (வெளிப்பட்ட) நபித்துவத்தின் அடையாளங்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(முதன் முதலாக தமக்கு வேத வெளிப்பாடு அருளப்பட்ட பின்பு) நபி(ஸல்) அவர்கள் (தம் துணைவியாரன) கதீஜா(ரலி) அவர்களிடம், தம் மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே, கதீஜா(ரலி) நபி(ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும், வேதம் கற்றவருமான) வரகா இப்னு நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறிஸ்துவராக மாறி விட்டிருந்த ஒரு மனிதராயிருந்தார். அவர், (நபி ஈசாவுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதி வந்தார்.
வரகா, நபி(ஸல்) அவர்களிடம், ‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘இவர்தாம் (இறைத்தூதர்) மூஸாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத வெளிப்பாட்டைக் கொண்டு வரும்) ‘நாமூஸ்’ எனும் வானவர். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப் போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்தால், உங்களுக்கு வலிமையுடன் உதவுவேன்’ என்று கூறினார்.
‘நாமூஸ்’ என்பவர் பிறருக்கு அறிவிக்காமல் மறைக்கிற விஷயங்களை (இறை கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவித்துத் தரும் வானவராவார்.
Book : 60
بَابُ (وَاذْكُرْ فِي الكِتَابِ مُوسَى إِنَّهُ كَانَ مُخْلِصًا وَكَانَ رَسُولًا نَبِيًّا وَنَادَيْنَاهُ مِنْ جَانِبِ الطُّورِ الأَيْمَنِ وَقَرَّبْنَاهُ نَجِيًّا)، كَلَّمَهُ، {وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا} [مريم: 53] ” يُقَالُ لِلْوَاحِدِ وَلِلاِثْنَيْنِ وَالجَمِيعِ نَجِيٌّ، وَيُقَالُ: {خَلَصُوا نَجِيًّا} [يوسف: 80] اعْتَزَلُوا: نَجِيًّا، وَالجَمِيعُ أَنْجِيَةٌ يَتَنَاجَوْنَ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، سَمِعْتُ عُرْوَةَ، قَالَ: قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا
فَرَجَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَدِيجَةَ يَرْجُفُ فُؤَادُهُ، فَانْطَلَقَتْ بِهِ إِلَى وَرَقَةَ بْنِ نَوْفَلٍ، وَكَانَ رَجُلًا تَنَصَّرَ، يَقْرَأُ الإِنْجِيلَ بِالعَرَبِيَّةِ، فَقَالَ وَرَقَةُ: مَاذَا تَرَى؟ فَأَخْبَرَهُ، فَقَالَ وَرَقَةُ: هَذَا النَّامُوسُ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى، وَإِنْ أَدْرَكَنِي يَوْمُكَ أَنْصُرْكَ نَصْرًا مُؤَزَّرًا “
النَّامُوسُ: صَاحِبُ السِّرِّ الَّذِي يُطْلِعُهُ بِمَا يَسْتُرُهُ عَنْ غَيْرِهِ
சமீப விமர்சனங்கள்