தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3393

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், (நபியே!) மூசாவின் செய்தி உங்களுக்கு எட்டியதா? அவர் நெருப்பைக் கண்ட போது தம்முடைய குடும்பத்தாரிடம் கூறினார்: கொஞ்சம் இருங்கள்; நான் நெருப்பைக் காண்கிறேன். அதிலிருந்து ஒரு கொள்ளியை உங்களுக்கு நான் கொண்டுவரக் கூடும்; அல்லது அந்த நெருப்பிற்கு அருகில் (பாதையை அறிந்து கொள்ள) ஏதாவது ஒரு வழிகாட்டுதல் எனக்குக் கிடைக்கக் கூடும்.

அங்கு சென்றதும் அவர் உரக்க அழைக்கப்பட்டார்: மூசாவே! நானே உங்க ளுடைய இறைவன். உங்கள் காலணிகளைக் கழற்றி விடுங்கள். திண்ணமாக, நீங்கள் துவா எனும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்கள். (20 :9-12)

மேலும் காண்க இறை வசனங்கள்: 1)20 : 9-12 2)20 : 10 3)20 : 12 4)20 : 21 5)20 : 54 6)20 : 87 7)20 : 81 8)28 : 10 9)28 : 34 10)28 : 19 11)28 : 20 12)28 : 29 13)28 : 35 14)20 : 27 15)20 : 31 16)20 : 61 17)20 : 63 18)20 : 64 19)20 : 67 20)20 : 71 21)20 : 95 22)20 : 97 23)20 : 119 24)28 : 11 25)12 : 3 26)20 : 40 27)20 : 42 28)20 : 77 29)20 : 87 30)20 : 88

 மாலிக் இப்னு ஸஃஸஆ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றிய (செய்திகளை) எங்களுக்கு அறிவித்தார்கள்: நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் அவர்கள், ‘இவர்கள் தாம் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். நான் அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள் என் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘நல்ல சகோதரரே வருக! நல்ல நபியே வருக!’ என்று கூறினார்கள்.

இதே நபிமொழி அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 60

(புகாரி: 3393)

بَابُ قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ: {وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى إِذْ رَأَى نَارًا} [طه: 10]- إِلَى قَوْلِهِ – {بِالوَادِ المُقَدَّسِ طُوًى}

{آنَسْتُ} [طه: 10]: أَبْصَرْتُ، {نَارًا لَعَلِّي آتِيكُمْ مِنْهَا بِقَبَسٍ} [طه: 10] الآيَةَ ” قَالَ ابْنُ عَبَّاسٍ المُقَدَّسُ: «المُبَارَكُ»، طُوًى: «اسْمُ الوَادِي»، {سِيرَتَهَا} [طه: 21]: «حَالَتَهَا وَالنُّهَى التُّقَى»، {بِمَلْكِنَا} [طه: 87]: «بِأَمْرِنَا»، {هَوَى} [طه: 81]: «شَقِيَ»، {فَارِغًا} [القصص: 10]: «إِلَّا مِنْ ذِكْرِ مُوسَى»، {رِدْءًا} [القصص: 34]: ” كَيْ يُصَدِّقَنِي، وَيُقَالُ: مُغِيثًا أَوْ مُعِينًا، يَبْطُشُ وَيَبْطِشُ “، {يَأْتَمِرُونَ} [القصص: 20]: «يَتَشَاوَرُونَ، وَالجِذْوَةُ قِطْعَةٌ غَلِيظَةٌ مِنَ الخَشَبِ لَيْسَ فِيهَا لَهَبٌ». {سَنَشُدُّ} [القصص: 35]: «سَنُعِينُكَ، كُلَّمَا عَزَّزْتَ شَيْئًا فَقَدْ جَعَلْتَ لَهُ عَضُدًا» وَقَالَ غَيْرُهُ: كُلَّمَا لَمْ يَنْطِقْ بِحَرْفٍ أَوْ فِيهِ تَمْتَمَةٌ أَوْ فَأْفَأَةٌ فَهِيَ عُقْدَةٌ، {أَزْرِي} [طه: 31]: ظَهْرِي {فَيُسْحِتَكُمْ} [طه: 61]: فَيُهْلِكَكُمْ، {المُثْلَى} [طه: 63]: تَأْنِيثُ الأَمْثَلِ، يَقُولُ: بِدِينِكُمْ، يُقَالُ: خُذِ المُثْلَى خُذِ الأَمْثَلَ، {ثُمَّ ائْتُوا صَفًّا} [طه: 64]، يُقَالُ: هَلْ أَتَيْتَ الصَّفَّ اليَوْمَ، يَعْنِي المُصَلَّى الَّذِي يُصَلَّى فِيهِ، {فَأَوْجَسَ} [طه: 67]: أَضْمَرَ خَوْفًا، فَذَهَبَتِ الوَاوُ مِنْ {خِيفَةً} [هود: 70] لِكَسْرَةِ الخَاءِ. {فِي جُذُوعِ النَّخْلِ} [طه: 71]: عَلَى جُذُوعِ، {خَطْبُكَ} [طه: 95]: بَالُكَ. {مِسَاسَ} [طه: 97]: مَصْدَرُ مَاسَّهُ مِسَاسًا. {لَنَنْسِفَنَّهُ} [طه: 97]: لَنُذْرِيَنَّهُ. الضَّحَاءُ الحَرُّ. {قُصِّيهِ} [القصص: 11]: اتَّبِعِي أَثَرَهُ، وَقَدْ يَكُونُ أَنْ تَقُصَّ الكَلاَمَ. {نَحْنُ نَقُصُّ عَلَيْكَ} [يوسف: 3]: {عَنْ جُنُبٍ} [القصص: 11]: عَنْ بُعْدٍ، وَعَنْ جَنَابَةٍ وَعَنِ اجْتِنَابٍ وَاحِدٌ ” قَالَ مُجَاهِدٌ: {عَلَى قَدَرٍ} [طه: 40]: «مَوْعِدٌ»، {لاَ تَنِيَا} [طه: 42]: «لاَ تَضْعُفَا». {يَبَسًا} [طه: 77]: «يَابِسَا»، {مِنْ زِينَةِ القَوْمِ} [طه: 87]: «الحُلِيِّ الَّذِي اسْتَعَارُوا مِنْ آلِ فِرْعَوْنَ»، فَقَذَفْتُهَا: «أَلْقَيْتَهَا»، {أَلْقَى} [النساء: 94]: «صَنَعَ»، {فَنَسِيَ} [طه: 88]: «مُوسَى»، هُمْ يَقُولُونَهُ: «أَخْطَأَ الرَّبَّ» {أَلَّا يَرْجِعَ إِلَيْهِمْ قَوْلًا} [طه: 89]: «فِي العِجْلِ»

حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَهُمْ عَنْ ” لَيْلَةَ أُسْرِيَ بِهِ: حَتَّى أَتَى السَّمَاءَ الخَامِسَةَ، فَإِذَا هَارُونُ، قَالَ: هَذَا هَارُونُ فَسَلِّمْ عَلَيْهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَرَدَّ، ثُمَّ قَالَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ

تَابَعَهُ ثَابِتٌ، وَعَبَّادُ بْنُ أَبِي عَلِيٍّ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.