தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3403

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 28

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல்களுக்கு, ‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியபடியும் ‘ஹித்தத்துன்’ (‘பாவ மன்னிப்புக்கோருகிறோம்’) என்று சொல்லிய படியும் நுழையுங்கள்’ என்று கட்டளையிடப்பட்டது.

ஆனால், அவர்கள் (ஹித்தத்துன்’ என்னும் சொல்லை ‘ஹின்தத்துன் – கோதுமை என்று) மாற்றிவிட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்த படி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானியவிதை என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 60

(புகாரி: 3403)

حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ: {ادْخُلُوا البَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ} [البقرة: 58] فَبَدَّلُوا، فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ، وَقَالُوا: حَبَّةٌ فِي شَعْرَةٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.