அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட்டார்கள். அப்போது ஒருவர், ‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருமுகம் (திருப்தி) நாடப்படாத பங்கீடாகும்’ என்று (அதிருப்தியுடன் கூறினார். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன்.
(அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவிற்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகு, ‘மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமையுடன்) சகித்துக் கொண்டார்’ என்று கூறினார்கள்.
Book :60
حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ
قَسَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَسْمًا، فَقَالَ رَجُلٌ: إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا أُرِيدَ بِهَا وَجْهُ اللَّهِ، فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ، فَغَضِبَ حَتَّى رَأَيْتُ الغَضَبَ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ: يَرْحَمُ اللَّهَ مُوسَى، قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ
சமீப விமர்சனங்கள்