தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3406

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

(அல்லாஹ் கூறுகிறான்:) நாம் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை கடலைக் கடக்க வைத்தோம். பின்னர் (அவர்கள் தமது பயணத்தைத் தொடர்ந்த போது) தம் சிலைகள் மீது பக்தி கொண்டிருந்த ஒரு சமுதாயத்தை அவர்கள் கடந்து செல்ல நேர்ந்தது.

அவர்கள், மூசாவே! இம் மக்களுக்குக் கடவுள்கள் இருப்பதுபோல் எங்களுக்கும் ஒரு கடவுளை உருவாக்கிக் கொடுங்கள் என்று கூறலானார்கள். அதற்கு மூசா நீங்கள் அறியாத மக்களாய் இருக்கிறீர்கள். இவர்கள் பின்பற்றிக் கொண்டிருக்கும் வழிமுறை அழிந்து போகக் கூடியதாகும். இவர்கள் செய்து கொண்டிருப்பவை முற்றிலும் வீணானவை என்று கூறினார். (7:138) மேலும் காண்க: 1) 7:139 2) 17:7

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (‘மர்ருழ் ழஹ்ரான்’ என்னுமிடத்தில்) ‘அராக்’ (மிஸ்வாக்) மரத்தின் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அதில் கருப்பான பழத்தை நீங்கள் பறியுங்கள்.

ஏனெனில், அதுதான் அவற்றில் மிக நல்லது’ என்று கூறினார்கள். மக்கள், ‘நீங்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தீர்களா?’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ‘ஆடு மேய்க்காத இறைத்தூதர் எவரேனும் உண்டா?’ என்று பதிலளித்தார்கள்.

Book : 60

(புகாரி: 3406)

بَابُ (يَعْكِفُونَ عَلَى أَصْنَامٍ لَهُمْ) ” {مُتَبَّرٌ} [الأعراف: 139]: خُسْرَانٌ، {وَلِيُتَبِّرُوا} [الإسراء: 7]: يُدَمِّرُوا، {مَا عَلَوْا} [الإسراء: 7]: مَا غَلَبُوا

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَجْنِي الكَبَاثَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «عَلَيْكُمْ بِالأَسْوَدِ مِنْهُ، فَإِنَّهُ أَطْيَبُهُ» قَالُوا: أَكُنْتَ تَرْعَى الغَنَمَ؟ قَالَ: «وَهَلْ مِنْ نَبِيٍّ إِلَّا وَقَدْ رَعَاهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.