பாடம் : 38
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை (இறைத்தூதர்) தாவூத்அவர்களுடைய தொழுகையாகும். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் அவர்களுடைய நோன்பாகும்.
தாவூத் அவர்கள் பாதி இரவு (வரை) உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். (பிறகு, மீண்டும்) அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள்.
அலீ பின் அப்தில்லாஹ் அல் மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இரவில்) ஆறில் ஒரு பகுதி நேரம் மீண்டும் உறங்குவார்கள் என்பதையே ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் என்னிடம் தூங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தான் ஸஹ்ர் நேரம் வரும் என்று சொன்னது குறிக்கின்றது.
அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத்(அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவார்கள். அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத்(அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் இரவில் பாதி நேரம் உறங்குவார்கள். அதில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வணங்குவார்கள். அதில் ஆறில் ஒரு பகுதி நேரம் (மீண்டும்) உறங்குவார்கள்’ என்று கூறினார்கள்.
Book : 60
بَابٌ: أَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ، وَأَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ: كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ، وَيَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا
قَالَ عَلِيٌّ: وَهُوَ قَوْلُ عَائِشَةَ: مَا أَلْفَاهُ السَّحَرُ عِنْدِي إِلَّا نَائِمًا
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ الثَّقَفِيِّ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَحَبُّ الصِّيَامِ إِلَى اللَّهِ صِيَامُ دَاوُدَ، كَانَ يَصُومُ يَوْمًا وَيُفْطِرُ يَوْمًا، وَأَحَبُّ الصَّلاَةِ إِلَى اللَّهِ صَلاَةُ دَاوُدَ، كَانَ يَنَامُ نِصْفَ اللَّيْلِ وَيَقُومُ ثُلُثَهُ، وَيَنَامُ سُدُسَهُ»
சமீப விமர்சனங்கள்