தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3421

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39

(அல்லாஹ் கூறுகிறான்:) (நபியே!) இவர்கள் பேசும் பேச்சுகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள். மேலும், பெரும் ஆற்றல்களைக் கொண்டிருந்த நம்முடைய அடியார் தாவூதின் வரலாற்றை இவர்களுக்கு நீங்கள் எடுத்துக் கூறுங்கள். அவர் (ஒவ்வொரு விவகாரத்திலும் அல்லாஹ்விடமே) திரும்பக் கூடியவராக இருந்தார். நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை காலையிலும், மாலையிலும் அவருடன் சேர்ந்து (இறைவனைத்) துதி செய்த வண்ணம் இருந்தன. பறவைகளும் ஒன்று திரண்டு வந்தன. அவை அனைத்தும் அல்லாஹ்வைத் துதிப்பதில் கவனம் செலுத்தக் கூடியனவாய் இருந்தன. நாம் அவருடைய அரசாட்சியை வலுப்படுத்தியிருந்தோம். நுண்ணறிவையும் அவருக்குக் கொடுத்திருந்தோம். மிக நுட்பமாகத் தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் நல்கியிருந்தோம்.

மேலும், சுவர் ஏறி மாடத்தில் நுழைந்த வழக்காளிகளின் செய்தி உங்களுக்கு வந்ததா?…நீங்கள் எங்களிடையே மிகச் சரியாகத் தீர்ப்பு வழங்குங்கள். நேர்மை தவறி விடாதீர்கள். எங்களுக்கு நேரான வழியைக் காட்டுங்கள். இதோ! இவர் என் சகோதரர். இவரிடம் தொண்ணூற்றொன்பது செம்மறி ஆடுகள் இருக்கின்றன. என்னிடமோ ஒரேயொரு செம்மறியாடுதான் இருக்கின்றது…. (38:17-24)

 முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

நான், ‘ஸாத்’ (என்னும் 38-வது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வீர்களா?’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அப்போது அவர்கள், ‘மேலும், இப்ராஹீமுடைய வழித் தோன்றல்களான தாவூத், சுலைமான், அய்யூப், மூஸா, ஹாரூன் ஆகியோருக்கும் நேர்வழி காட்டினோம். இவ்வாறு… (நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே (நீங்களும்) பின்பற்றுங்கள்’ என்னும் (திருக்குர்ஆன் 06:84-90) திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார்கள். பிறகு, ‘உங்கள் நபி(ஸல்) அவர்களும் கூட முந்தைய நபிமார்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப்பட்டுள்ளவர்களில் ஒருவர் தாம்’ என்று கூறினார்கள்.
Book : 60

(புகாரி: 3421)

بَابُ {وَاذْكُرْ عَبْدَنَا دَاوُدَ ذَا الأَيْدِ إِنَّهُ أَوَّابٌ}

إِلَى قَوْلِهِ: {وَفَصْلَ الخِطَابِ} [ص: 20]، قَالَ مُجَاهِدٌ: ” الفَهْمُ فِي القَضَاءِ. {وَهَلْ أَتَاكَ نَبَأُ الخَصْمِ} [ص: 21] إِلَى {وَلاَ تُشْطِطْ} [ص: 22]: لاَ تُسْرِفْ، {وَاهْدِنَا إِلَى سَوَاءِ الصِّرَاطِ، إِنَّ هَذَا أَخِي لَهُ تِسْعٌ وَتِسْعُونَ نَعْجَةً} [ص: 23] يُقَالُ لِلْمَرْأَةِ نَعْجَةٌ، وَيُقَالُ لَهَا أَيْضًا شَاةٌ. (وَلِي نَعْجَةٌ وَاحِدَةٌ فَقَالَ أَكْفِلْنِيهَا) مِثْلُ (وَكَفَلَهَا زَكَرِيَّاءُ) ضَمَّهَا، {وَعَزَّنِي} [ص: 23] غَلَبَنِي، صَارَ أَعَزَّ مِنِّي، أَعْزَزْتُهُ جَعَلْتُهُ عَزِيزًا {فِي الخِطَابِ} [ص: 23] يُقَالُ: المُحَاوَرَةُ، {قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَى نِعَاجِهِ، وَإِنَّ كَثِيرًا مِنَ الخُلَطَاءِ} [ص: 24] الشُّرَكَاءِ، {لَيَبْغِي} [ص: 24]- إِلَى قَوْلِهِ – {أَنَّمَا فَتَنَّاهُ} [ص: 24] ” قَالَ ابْنُ عَبَّاسٍ: «اخْتَبَرْنَاهُ» وَقَرَأَ عُمَرُ فَتَّنَّاهُ، بِتَشْدِيدِ التَّاءِ {فَاسْتَغْفَرَ رَبَّهُ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ} [ص: 24]

حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا سَهْلُ بْنُ يُوسُفَ، قَالَ: سَمِعْتُ العَوَّامَ، عَنْ مُجَاهِدٍ، قَالَ

قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: أَنَسْجُدُ فِي ص؟ فَقَرَأَ: {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ} – حَتَّى أَتَى – {فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} [الأنعام: 90]. فَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.