பாடம் : 42
அல்லாஹ் கூறுகிறான்:
மேலும், ஒரு கிராமவாசிகளிடம் (நம்) தூதர்கள் வந்த போது நடந்த சம்பவத்தை உதாரணமாக இவர்களுக்குக் கூறுவீராக. நாம் அவர்களிடம் இரு தூதர்களை அனுப்பிய போது, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் எனத் தூற்றினார்கள். பிறகு நாம் மூன்றாமவரை அனுப்பி (அவ்விரு தூதர்களுக்கு) உதவினோம். அத்தூதர்கள் அனைவரும் (அம் மக்களை நோக்கி) உண்மையில் நாங்கள் உங்களிடம் இறைத் தூதர்களாய் அனுப்பப்பட்டுள்ளோம் எனக் கூறினார்கள்.
நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி வேறிலர். மேலும் கருணைமிக்க இறைவன் எதையும் இறக்கிவைக்கவில்லை. நீங்கள் வெறும் பொய்யே கூறுகின்றீர்கள் என்று அந்தக் கிராமவாசிகள் கூறினார்கள்.
தூதர்கள் கூறினார்கள்: திண்ணமாக, நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் அதிபதி நன்கறிகின்றான். மேலும் எங்கள் மீதுள்ள கடமை, தூதைத் தெளிவாய் (உங்களிடம்) சேர்ப்பித்து விடுவதைத் தவிர வேறில்லை! அதற்கு அக்கிராம வாசிகள், நாங்களோ, உங்களை எங்களுக்கு ஏற்பட்ட அபசகுனமாகக் கருதுகின்றோம். நீங்கள் (இந்த அழைப்பிலிருந்து) விலகிக் கொள்ளா விட்டால், நிச்சயமாக நாங்கள் உங்களைக் கல்லால் அடிப்போம். மேலும், நீங்கள் எங்க ளிடமிருந்து அவசியம் துன்பமிகு தண்டனை பெறுவீர்கள்! எனக் கூறலானார்கள்.
(அதற்கு) அத்தூதர்கள், உங்களுடைய அபச குனம் உங்களோடு தான் இருக்கிறது. உங்களுக்கு நல்லுரை கூறப்பட்டதற்காகவா (நீங்கள் இவ்வாறெல்லாம் பேசுகிறிர்கள்!) உண்மை யாதெனில், நீங்கள் வரம்பு மீறிய மக்களாவீர்! எனப் பதிலளித்தார்கள். (36:13-19)
பாடம் : 43
அல்லாஹ் கூறுகிறான்:
உங்கள் இறைவன் தன் அடியார் ஸகரிய்யா மீது பொழிந்த அருளைப் பற்றிய செய்தியாகும் இது. அவர் தம் இறைவனை மெதுவாக அழைத்த போது, அவர் பணிவுடன் வேண்டினார்: என் அதிபதியே! என் எலும்புகள் நலிவடைந்து விட்டன. மேலும், நரையினால் என் தலை மினுமினுப் பாகிவிட்டது. மேலும், என் அதிபதியே! நான் உன்னிடம் பிரார்த்தனை புரிந்து ஒரு போதும் ஏமாற்றம் அடைந்ததில்லை. எனக்குப் பின் என் உறவினர்கள் (மேற்கொள்ளக் கூடிய தீயவழி) பற்றி நான் அஞ்சுகின்றேன்.
மேலும்,என்னுடைய மனைவி மலடியாக இருக்கின் றாள். எனவே, உனது தனிப்பட்ட அருளால் எனக்கு வாரிசை வழங்குவாயாக! அவர் எனக்கும் யஅகூபுடைய குடும்பத்தினருக்கும் வாரிசாகத் திகழட்டும். மேலும், என் இறைவா! அவரை விரும்பத் தக்க மனிதராய் ஆக்குவாயாக! (அவருக்கு பதிலளிக்கப்பட்டது:) ஸகரிய்யாவே! உங்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்று நாம் நற்செய்தி அறிவிக்கின்றோம். அதன் பெயர் யஹ்யா ஆகும். இந்தப் பெயருடைய எவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை…. (19:3-7) தொடர்ந்து காண்க: இறைவசனங்கள் (19:8-15)
மாலிக் இப்னு ஸஅஸஆ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் அவர்கள் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தபோது கூறினார்கள்:
…பிறகு (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் ஏறிச் சென்று இரண்டாம் வானத்தை அடைந்தார். அதன் வாயிலைத் திறக்கக் கூறினார். ‘யார் அது?’ என்ற கேட்கப்பட்டது. ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘ஜிப்ரீல்’ என்று பதிலளித்தார். ‘உங்களுடன் இருப்பவர் யார்’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘முஹம்மத்’ என்று பதிலளித்தார். ‘அவரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘ஆம்’ என்று பதில் கூறினார்.
நான் அங்கு சென்று சேர்ந்த பொழுது அங்கு யஹ்யா(அலை) மற்றும் ஈசா(அலை) ஆகியோர் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள். (ஒருவருக்கொருவர் சின்னம்மா பெரியம்மா மகன்கள்) ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘இது யஹ்யாவும் ஈசாவும் ஆவர். இருவருக்கும் சலாம் சொல்லுங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நான் சலாம் சொன்னேன். அவர்கள் இருவரும் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘நல்ல சகோதரரே! நல்ல நபியே! வருக!’ என்று கூறி (வாழ்த்தி)னார்கள்.
Book : 60
بَابُ {وَاضْرِبْ لَهُمْ مَثَلًا أَصْحَابَ القَرْيَةِ} [يس: 13] الآيَةَ
{فَعَزَّزْنَا} [يس: 14]: قَالَ مُجَاهِدٌ شَدَّدْنَا وَقَالَ ابْنُ عَبَّاسٍ طَائِرُكُمْ مَصَائِبُكُمْ
بَابُ قَوْلِ اللَّهِ تَعَالَى ذِكْرُ رَحْمَةِ رَبِّكَ عَبْدَهُ زَكَرِيَّاءَ، إِذْ نَادَى
رَبَّهُ نِدَاءً خَفِيًّا، قَالَ: رَبِّ إِنِّي وَهَنَ العَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا إِلَى قَوْلِهِ: {لَمْ نَجْعَلْ لَهُ مِنْ قَبْلُ سَمِيًّا} [مريم: 7] قَالَ ابْنُ عَبَّاسٍ: مِثْلًا، يُقَالُ: رَضِيًّا مَرْضِيًّا، (عُتِيًّا): عَصِيًّا، عَتَا: يَعْتُو، {قَالَ رَبِّ أَنَّى يَكُونُ لِي غُلاَمٌ وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا وَقَدْ بَلَغْتُ مِنَ الكِبَرِ عِتِيًّا} [مريم: 8]- إِلَى قَوْلِهِ – {ثَلاَثَ لَيَالٍ سَوِيًّا} [مريم: 10] وَيُقَالُ: صَحِيحًا، {فَخَرَجَ عَلَى قَوْمِهِ مِنَ المِحْرَابِ فَأَوْحَى إِلَيْهِمْ أَنْ سَبِّحُوا بُكْرَةً وَعَشِيًّا} [مريم: 11] فَأَوْحَى: فَأَشَارَ {يَا يَحْيَى خُذِ الكِتَابَ بِقُوَّةٍ} [مريم: 12]- إِلَى قَوْلِهِ – {وَيَوْمَ يُبْعَثُ حَيًّا} [مريم: 15] ” {حَفِيًّا} [مريم: 47]: لَطِيفًا، {عَاقِرًا} [مريم: 5] الذَّكَرُ وَالأُنْثَى سَوَاءٌ
حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ مَالِكِ بْنِ صَعْصَعَةَ
أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَهُمْ عَنْ لَيْلَةَ أُسْرِيَ بِهِ ” ثُمَّ صَعِدَ حَتَّى أَتَى السَّمَاءَ الثَّانِيَةَ فَاسْتَفْتَحَ، قِيلَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ قِيلَ: وَمَنْ مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ قِيلَ: وَقَدْ أُرْسِلَ إِلَيْهِ؟ قَالَ: نَعَمْ، فَلَمَّا خَلَصْتُ فَإِذَا يَحْيَى وَعِيسَى وَهُمَا ابْنَا خَالَةٍ، قَالَ: هَذَا يَحْيَى وَعِيسَى فَسَلِّمْ عَلَيْهِمَا، فَسَلَّمْتُ فَرَدَّا، ثُمَّ قَالاَ: مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ
சமீப விமர்சனங்கள்