தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3433

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46

அல்லாஹ் கூறுகின்றான்:

வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவு கூருங்கள்: மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது வாக்கு பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈசா அல் மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், (அல்லாஹ்விடம்) நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார். அன்றி, அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும், மனிதர்களுடன் பேசுவார். தவிர, நல்லொழுக்கமுடையோரில் உள்ளவராகவுமிருப்பார்.

(அதற்கு மர்யம் தன் இறைவனை நோக்கி,) என் இறைவனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டு விடும்? என்று கூறினார். (அதற்கு) இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு பொருளை(ப் படைக்க) நாடினால், அதனை ஆகுக என அவன் கூறுவது தான் (தாமதம்)! உடனே அது ஆகிவிடும் என்று கூறினான். மேலும் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான். (3:45-48)

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்கான சிறப்பு, மற்ற எல்லா உணவுகளையும் விட ‘ஸரீது’க்குள்ள சிறப்பைப் போன்றதாகும். ஆண்களில் நிறையப் பேர் முழுமை பெற்றிருக்கின்றனர். ஆனால், பெண்களில் இம்ரானின் மகள் மர்யமையும் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் தவிர வேறெவரும் முழுமை பெறவில்லை. என அபூ மூஸா அல் அஷ் அரீ(ரலி) அறிவித்தார்.
Book : 60

(புகாரி: 3433)

بَابُ قَوْلِهِ تَعَالَى {إِذْ قَالَتِ المَلاَئِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ المَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ} [آل عمران: 45]

إِلَى قَوْلِهِ {فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ} [البقرة: 117]: يُبَشِّرُكِ وَيَبْشُرُكِ وَاحِدٌ، {وَجِيهًا} [آل عمران: 45]: شَرِيفًا ” وَقَالَ إِبْرَاهِيمُ: المَسِيحُ: الصِّدِّيقُ وَقَالَ مُجَاهِدٌ: الكَهْلُ الحَلِيمُ، وَالأَكْمَهُ مَنْ يُبْصِرُ بِالنَّهَارِ وَلاَ يُبْصِرُ بِاللَّيْلِ، وَقَالَ غَيْرُهُ: مَنْ يُولَدُ أَعْمَى

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ مُرَّةَ الهَمْدَانِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ، كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ: إِلَّا مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.