தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-345

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 7 தண்ணீரைப் பயன்படுத்தினால், தமக்கு நோயோ மரணமோ ஏற்பட்டுவிடுமென குளியல் கடமையானவர் அஞ்சினால் அல்லது தம்மிடமுள்ள தண்ணீரைச் செலவழித்து விட்டால் தாகத்தினால் சிரமப்படநேரிடும் என்று அவர் பயந்தால் தயம்மும் செய்து கொள்ளலாம். (தாத்துஸ் ஸலாஸில் போரின் போது) குளிரான ஓர் இரவில் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களுக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. ஆகவே அவர்கள் (குளிக்காமல்) தயம்மும் செய்து கொண்டார்கள். (பிறகு இது பற்றி அவர்கள் தம் தோழர்களிடம் குறிப்பிடுகையில்) நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள்- நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான் எனும் (4:29ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் (மதீனா திரும்பியதும்) இது குறித்து நபி(ஸல்) அவர்களிடம் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

 (குளிப்புக் கடமையானவருக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டாலும் அவர் தொழ வேண்டாமல்லவா?’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, ‘இந்த விஷயத்தில் நாம் சலுகையளித்தால் குளிர் ஏற்பட்டால் கூட மக்கள் தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார்கள்’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் (‘தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது’ என்று) சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?’ என்று அவர் கேட்டார். அதற்கு, ‘(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறியபோது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை’ என்பது உமக்குத் தெரியாதா?’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கேட்டார்.
‘இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ?’ என ஷகீக் அவர்களிடம் நான் கேட்டதற்கு, அவர் ‘ஆம்! எனப் பதிலளித்தார்கள்’ என அஃமஷ் அறிவித்தார்.
Book : 7

(புகாரி: 345)

بَابٌ: إِذَا خَافَ الجُنُبُ عَلَى نَفْسِهِ المَرَضَ أَوِ المَوْتَ، أَوْ خَافَ العَطَشَ، تَيَمَّمَ

وَيُذْكَرُ أَنَّ عَمْرَو بْنَ العَاصِ: ” أَجْنَبَ فِي لَيْلَةٍ بَارِدَةٍ، فَتَيَمَّمَ وَتَلاَ: {وَلاَ تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا} [النساء: 29] فَذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُعَنِّفْ

حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ غُنْدَرٌ أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ

قَالَ أَبُو مُوسَى لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: «إِذَا لَمْ يَجِدِ المَاءَ لاَ يُصَلِّي؟»

قَالَ عَبْدُ اللَّهِ: لَوْ رَخَّصْتُ لَهُمْ فِي هَذَا كَانَ إِذَا وَجَدَ أَحَدُهُمُ البَرْدَ قَالَ: هَكَذَا – يَعْنِي تَيَمَّمَ – وَصَلَّى، قَالَ: قُلْتُ: «فَأَيْنَ قَوْلُ عَمَّارٍ لِعُمَرَ؟» قَالَ: إِنِّي لَمْ أَرَ عُمَرَ قَنِعَ بِقَوْلِ عَمَّارٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.