தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3459

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இதற்கு முன் சென்ற சமுதாயங்களின் (ஆயுட்) காலத் தவணைகளிடையே உங்கள் ஆயுள், தவணை, அஸருக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவாகும். உங்கள் நிலையும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் நிலையும் தொழிலாளர்கள் சிலரை வேலைக்கு அமர்த்திய ஒரு மனிதரைப் போன்றதாகும்.

அவர் (தொழிலாளர்களிடம்), ‘எனக்காக நடுப்பகல் நேரம் வரை ஒவ்வொரு கீராத் (ஊதியத்)திற்கு வேலை செய்பவர் யார்? என்று கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு கீராத்துக்காக நடுப்பகல் வரை வேலை செய்தார்கள். பிறகு அவர், ‘நடுப்பகல் நேரத்திலிருந்து அஸர் தொழுகை வரை ஒவ்வொரு கீராத் (ஊதியத்)திற்கு எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று கேட்டார். கிறிஸ்தவர்கள் நடுப்பகல் நேரத்திலிருந்து அஸர் தொழுகை வரை ஒவ்வொரு கீராத்துக்காக வேலை செய்தார்கள்.

பிறகு அவர், ‘அஸர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டிரண்டு கீராத்துகளுக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று கேட்டார்.
தெரிந்து கொள்ளுங்கள்: அஸர் தொழுகையிலிருந்து சூரியன் மறையும் வரை இரண்டிரண்டு கீராத்துகளுக்காக வேலை செய்தவர்கள் (முஸ்லிம்களாகிய) நீங்கள் தாம். தெரிந்து கொள்ளுங்கள்: உங்களுக்குத் தான் இருமுறை ஊதியம் கிடைத்துள்ளது.

இதைக் கண்ட யூதர்களும் கிறிஸ்தவர்களும் கோபமடைந்து, ‘நாங்கள் அதிகமாக வேலை செய்திருக்க, கூலி (எங்களுக்குக் குறைவாகக் கிடைப்பதா?’ என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ், ‘நான் உங்கள் உரிமையிலிருந்து எதையாவது குறைத்(து அநீதியிழைத்திருக்கிறேனா?’ என்று கேட்டான். அவர்கள், ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள்.

அல்லாஹ், ‘அ(ப்படி சிலருக்கு மட்டும் அதிகமாகக் கொடுப்ப)து என் அருளாகும்.  அதை நான் விரும்பியவர்களுக்குக் கொடுக்கிறேன்’ என்று சொன்னான். என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :60

(புகாரி: 3459)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

إِنَّمَا أَجَلُكُمْ فِي أَجَلِ مَنْ خَلاَ مِنَ الأُمَمِ، مَا بَيْنَ صَلاَةِ العَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ، وَإِنَّمَا مَثَلُكُمْ وَمَثَلُ اليَهُودِ، وَالنَّصَارَى، كَرَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالًا، فَقَالَ: مَنْ يَعْمَلُ لِي إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، فَعَمِلَتِ اليَهُودُ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، ثُمَّ قَالَ: مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلاَةِ العَصْرِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، فَعَمِلَتِ النَّصَارَى مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلاَةِ العَصْرِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، ثُمَّ قَالَ: مَنْ يَعْمَلُ لِي مِنْ صَلاَةِ العَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، أَلاَ، فَأَنْتُمُ الَّذِينَ يَعْمَلُونَ مِنْ صَلاَةِ العَصْرِ إِلَى مَغْرِبِ الشَّمْسِ، عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، أَلاَ لَكُمُ الأَجْرُ مَرَّتَيْنِ، فَغَضِبَتِ اليَهُودُ، وَالنَّصَارَى، فَقَالُوا: نَحْنُ أَكْثَرُ عَمَلًا وَأَقَلُّ عَطَاءً، قَالَ اللَّهُ: هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا؟ قَالُوا: لاَ، قَالَ: فَإِنَّهُ فَضْلِي أُعْطِيهِ مَنْ شِئْتُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.