அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸ அல் அஷ்அரி(ரலி) ஆகியோருடன் நானும் இருந்தபோது அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் ‘அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையானவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது, ‘நபி(ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களிடம், ‘தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது’ என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?’ என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, ‘(அம்மார் (ரலி) உமர் (ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறிய போது) அதை உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) பதில் கூறினார்.
அப்போது, ‘அம்மார் (ரலி) அறிவிப்பதைவிட்டு விடுங்கள். ‘தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்’ என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?’ என்று அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, ‘இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு தயம்மும் செய்வார்’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்.
இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீகிடம் நான் கேட்டதற்கு அவர் ‘ஆம்! என்றார்’ என அஃமஷ் அறிவித்தார்.
அத்தியாயம்: 7
(புகாரி: 346)حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ شَقِيقَ بْنَ سَلَمَةَ، قَالَ
كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ، وَأَبِي مُوسَى، فَقَالَ لَهُ أَبُو مُوسَى: أَرَأَيْتَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِذَا أَجْنَبَ فَلَمْ يَجِدْ مَاءً، كَيْفَ يَصْنَعُ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ: لاَ يُصَلِّي حَتَّى يَجِدَ المَاءَ، فَقَالَ أَبُو مُوسَى: فَكَيْفَ تَصْنَعُ بِقَوْلِ عَمَّارٍ حِينَ قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَكْفِيكَ» قَالَ: أَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِذَلِكَ، فَقَالَ أَبُو مُوسَى: فَدَعْنَا مِنْ قَوْلِ عَمَّارٍ كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ؟ فَمَا دَرَى عَبْدُ اللَّهِ مَا يَقُولُ، فَقَالَ: إِنَّا لَوْ رَخَّصْنَا لَهُمْ فِي هَذَا لَأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَى أَحَدِهِمُ المَاءُ أَنْ يَدَعَهُ وَيَتَيَمَّمَ فَقُلْتُ لِشَقِيقٍ فَإِنَّمَا كَرِهَ عَبْدُ اللَّهِ لِهَذَا؟ قَالَ: «نَعَمْ»
Bukhari-Tamil-346.
Bukhari-TamilMisc-346.
Bukhari-Shamila-346.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்