பாடம் : 3
திருக்குர்ஆன் குறைஷி குலத்தாரின் மொழி வழக்குப்படி அருளப்பட்டது.
அனஸ் ரலி) அறிவித்தார்.
உஸ்மான் (ரலி) (அன்னை ஹஃப்ஸாவிடமிருந்து குர்ஆன் பதிவுகளை வாங்கிவரச் செய்து) ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், ஸயீத் இப்னு ஆஸ், அப்துர் ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னி ஹிஷாம் (ரலி) ஆகியோரை அழைத்து, (அவற்றைப் பிரதியெடுக்கப் பணித்தார்கள்.) அவர்கள் ஏடுகளில் அவற்றைப் பிரதியெடுத்தார்கள்.
உஸ்மான் (ரலி) (அன்சாரியான ஸைத் இப்னு ஸாபித் தவிரஉள்ள) குறைஷிகளின் மூன்று பேர் கொண்ட அந்தக் குழுவிடம், ‘நீங்கள் மூவரும் ஸைத் இப்னு ஸாபித்தும் குர்ஆனின் ஏதேனும் ஒரு (எழுத்து இலக்கண) விஷயத்தில் கருத்து வேறுபட்டால் குறைஷிகளின் மொழி வழக்கிலேயே அதை எழுதுங்கள். ஏனெனில், குர்ஆன் குறைஷிகளின் மொழி வழக்கில் தான் இறங்கியது’ என்று கூறினார்கள். அக்குழுவினரும் அவ்வாறே செய்தார்கள்.
Book : 61
بَابُ نَزَلَ القُرْآنُ بِلِسَانِ قُرَيْشٍ
حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسٍ
أَنَّ عُثْمَانَ، دَعَا زَيْدَ بْنَ ثَابِتٍ، وَعَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، وَسَعِيدَ بْنَ العَاصِ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ الحَارِثِ بْنِ هِشَامٍ فَنَسَخُوهَا فِي المَصَاحِفِ، وَقَالَ عُثْمَانُ لِلرَّهْطِ القُرَشِيِّينَ الثَّلاَثَةِ: «إِذَا اخْتَلَفْتُمْ أَنْتُمْ وَزَيْدُ بْنُ ثَابِتٍ فِي شَيْءٍ مِنَ القُرْآنِ، فَاكْتُبُوهُ بِلِسَانِ قُرَيْشٍ، فَإِنَّمَا نَزَلَ بِلِسَانِهِمْ فَفَعَلُوا ذَلِكَ»
சமீப விமர்சனங்கள்