தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3550

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 கத்தாதா (ரஹ்) அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘நபி (ஸல்) அவர்கள் மருதாணி பூசியிருந்தார்களா?’ என்று கேட்டேன் அதற்கு அவர்கள், ‘இல்லை. அவர்களின் நெற்றிப் பொட்டு முடியில் சிறிதளவு நரை இருந்தது. அவ்வளவுதான்’ என்று பதிலளித்தார்கள்.
Book :61

(புகாரி: 3550)

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ

سَأَلْتُ أَنَسًا هَلْ خَضَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ «لاَ إِنَّمَا كَانَ شَيْءٌ فِي صُدْغَيْهِ»





  • இந்த செய்தியில் நபி (ஸல்) அவர்கள் நரைமுடிக்கு மருதாணியிடவில்லை என்று வந்துள்ளது. என்றாலும் வேறு சில செய்திகளில் நபி (ஸல்) அவர்கள் நரைமுடிக்கு மருதாணியிட்டார்கள் என்று வந்துள்ளது. ஒன்றை இல்லை என்று கூறுபவரை விட (ஆதாரத்துடன்) இருக்கிறது என்று கூறுபவர் கூடுதல் செய்தியை அறிந்துள்ளார் என்ற சட்டவிதிப்படி ஹதீஸ்கலை அறிஞர்கள் நபி (ஸல்) அவர்கள் நரைமுடிக்கு மருதாணியிட்டார்கள் என்று வரும் செய்திகளும் சரியானவைகளே என்று கூறியுள்ளனர்.
  • மேலும் அனஸ் (ரலி) அவர்களின் இந்த அறிவிப்பைப் பற்றி நவவீ பிறப்பு ஹிஜ்ரி 631
    இறப்பு ஹிஜ்ரி 676
    வயது: 45
    அவர்கள் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் சில நேரம் மருதாணியிட்டுள்ளார்கள். பெரும்பாலும் மருதாணியிடவில்லை என்பதால் தான் அனஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார் என்று விளக்கம் கூறியுள்ளார்…
  • மேலும் நபி (ஸல்) அவர்களுக்கு குறைந்த நரைமுடி இருப்பதால் இப்படி செய்திருக்கலாம். அதிக நரைமுடி இருப்போரை கண்ட நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு கறுப்பு நிறத்தை தவிர மற்ற நிறங்களை பூச கூறியுள்ளார்கள் என்பதற்கு சரியான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: புகாரி-3462 )

2 comments on Bukhari-3550

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்த ஹதீஸையும்(புஹாரி 3550) மற்றும் மற்றொரு ஹதீஸையும் (புஹாரி 3462) இணைத்து விளக்கம் தரவும்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      சுட்டிக்காட்டியதற்கு ஜஸாகல்லாஹு கைரா. இந்த விளக்கம் பற்றி கருத்திடவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.