தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3582

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மதீனாவாசிகளைப் பஞ்சம் பீடித்தது. (அந்தக் கால கட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு (நாட்டுப்புற) மனிதர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! குதிரைகள் அழிந்துவிட்டன. ஆடுகளும் அழிந்துவிட்டன. எனவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழை பொழியச் செய்வான்’ என்று கேட்டார்.

உடனே, நபி (ஸல்) அவர்கள், தம் கையை உயர்த்திப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது, வானம் (மேகங்கள் இல்லாமல்) கண்ணாடியைப் போன்றிருந்தது. (நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தவுடன்) காற்று ஒன்று வேகமாக வீசி மேகக் கூட்டத்தைத் தோற்றுவித்தது. பிறகு, அந்த மேகக் கூட்டம் ஒன்று திரண்டது. பிறகு, வானம் மழையைப் பொழிந்தது. நாங்கள் தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளிவாசலிலிருந்து) வெளியே வந்து எங்கள் இல்லங்களை அடைந்தோம்.

அடுத்த ஜும்ஆ (நாள்) வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது. எனவே, (மழை பெய்விக்கும்படி) இறைவனிடம் பிரார்த்திக்கச் சொன்ன) அந்த மனிதர்… அல்லது வேறொரு மனிதர்… நபி(ஸல்) அவர்கள் முன் எழுந்து நின்று, ‘இறைத்தூதர் அவர்களே! (அடை மழையின் காரணத்தால்) வீடுகள் இடிந்துவிட்டன. எனவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழையை நிறுத்திவிடுவான்’ என்று கூறினார்.

அதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘புன்னகை புரிந்து, ‘(இறைவா!) எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழி! எங்களின் மீது (எங்களுக்குக் கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!’ என்று பிரார்த்ததித்தார்கள். நான் மேகத்தை நோக்கினேன். அது பிளவு பட்டு மதீனாவைச் சுற்றிலும் ஒரு மாலை போல் வளையமிட்டிருந்தது.

இது அறிவிப்பாளர்களின் இரண்டு தொடர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Book :61

(புகாரி: 3582)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَبْدِ العَزِيزِ، عَنْ أَنَسٍ، وَعَنْ يُونُسَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

أَصَابَ أَهْلَ المَدِينَةِ قَحْطٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَيْنَا هُوَ يَخْطُبُ يَوْمَ جُمُعَةٍ، إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الكُرَاعُ، هَلَكَتِ الشَّاءُ، فَادْعُ اللَّهَ يَسْقِينَا، «فَمَدَّ يَدَيْهِ وَدَعَا»، قَالَ أَنَسٌ: وَإِنَّ السَّمَاءَ لَمِثْلُ الزُّجَاجَةِ، فَهَاجَتْ رِيحٌ أَنْشَأَتْ سَحَابًا، ثُمَّ اجْتَمَعَ ثُمَّ أَرْسَلَتِ السَّمَاءُ عَزَالِيَهَا، فَخَرَجْنَا نَخُوضُ المَاءَ حَتَّى أَتَيْنَا مَنَازِلَنَا، فَلَمْ نَزَلْ نُمْطَرُ إِلَى الجُمُعَةِ الأُخْرَى، فَقَامَ إِلَيْهِ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: تَهَدَّمَتِ البُيُوتُ فَادْعُ اللَّهَ يَحْبِسْهُ، فَتَبَسَّمَ، ثُمَّ قَالَ: «حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا» فَنَظَرْتُ إِلَى السَّحَابِ تَصَدَّعَ حَوْلَ المَدِينَةِ كَأَنَّهُ إِكْلِيلٌ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.