தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3624

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் இறந்தபோது) ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் நான் (அந்த இரகசியம் பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘(வானவர்) ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை அதை இரண்டு முறை ஓதச் செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்துவிட்ட(தைக் குறிப்ப)தாகவே அதை கருதுகிறேன். என் வீட்டாரில் என்னை முதலில் வந்தடையப் போவது நீ தான்’ என்று கூறினார்கள். எனவே, நான் அழுதேன்.

உடனே, அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் பெண்களின்… அல்லது இறைநம்பிக்கையாளர்களில் பெண்களின்… தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?’ என்று கேட்டார்கள். அதைக் கேட்டு (மகிழ்ச்சியால்) நான் சிரித்தேன்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 61

(புகாரி: 3624)

فَسَأَلْتُهَا فَقَالَتْ: أَسَرَّ إِلَيَّ: «إِنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُنِي القُرْآنَ كُلَّ سَنَةٍ مَرَّةً، وَإِنَّهُ عَارَضَنِي العَامَ مَرَّتَيْنِ، وَلاَ أُرَاهُ إِلَّا حَضَرَ أَجَلِي، وَإِنَّكِ أَوَّلُ أَهْلِ بَيْتِي لَحَاقًا بِي». فَبَكَيْتُ، فَقَالَ: «أَمَا تَرْضَيْنَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاءِ أَهْلِ الجَنَّةِ، أَوْ نِسَاءِ المُؤْمِنِينَ» فَضَحِكْتُ لِذَلِكَ


Bukhari-Tamil-3624.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3624.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




மேலும் பார்க்க: புகாரி-3623 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.