பாடம் : 7 (இறைமறுப்பாளர்களின் நாடாயிருந்த) ஷாம் நாட்டு நீளங்கி அணிந்து தொழுவது.
அக்னி ஆராதகர்கள்(மஜூசிகள்) நெய்யும் ஆடைகளை (கழுவப்படுவதற்கு முன்பே) அணிந்து தொழுவது தவறன்று என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள்.
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் (ஆடு, மாடு, ஒட்டக) மூத்திரத்தில் நனைத்துச் சாயமேற் பட்ட யமன் நாட்டு ஆடையை அணிந்து தொழுவதை நான் பார்த்தேன் என மஅமர் பின் ராஷித் (ரஹ்) கூறுகின்றார்கள்.
அலீ (ரலி) அவர்கள் அடர்த்தி குறைக்கப்படாத (உடலோடு அப்பிக் கொள்ளும்) ஆடையுடன் தொழுதார்கள்.
‘நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றபோது, ‘முகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்திற்குச் சென்று அவர்களின் இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள்.
அப்போது அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூச் செய்வதற்காக அதிலிருந்து தங்களின் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கை இறுக்கமாக இருந்ததால் தங்களின் கையை அந்த ஆடையின் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். தங்களின் இரண்டு காலுறைகளின் மீதும் (அவற்றைக் கழுவாமல்) ஈரக்கையால் மஸஹ் செய்து (தடவி) தொழுதார்கள்’ என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
Book : 8
بَابُ الصَّلاَةِ فِي الجُبَّةِ الشَّامِيَّةِ
وَقَالَ الحَسَنُ: «فِي الثِّيَابِ يَنْسُجُهَا المَجُوسِيُّ لَمْ يَرَ بِهَا بَأْسًا» وَقَالَ مَعْمَرٌ: «رَأَيْتُ الزُّهْرِيَّ يَلْبَسُ مِنْ ثِيَابِ اليَمَنِ مَا صُبِغَ بِالْبَوْلِ» وَصَلَّى عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: فِي ثَوْبٍ غَيْرِ مَقْصُورٍ “
حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ مُغِيرَةَ بْنِ شُعْبَةَ، قَالَ
كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَقَالَ: «يَا مُغِيرَةُ خُذِ الإِدَاوَةَ»، فَأَخَذْتُهَا، فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى تَوَارَى عَنِّي، فَقَضَى حَاجَتَهُ، وَعَلَيْهِ جُبَّةٌ شَأْمِيَّةٌ، فَذَهَبَ لِيُخْرِجَ يَدَهُ مِنْ كُمِّهَا فَضَاقَتْ، فَأَخْرَجَ يَدَهُ مِنْ أَسْفَلِهَا، فَصَبَبْتُ عَلَيْهِ، فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ صَلَّى
சமீப விமர்சனங்கள்