தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3671

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அறிவித்தார்.
நான் என் தந்தை (அலீ – ரலி – அவர்கள்) இடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு மக்களில் யார் சிறந்தவர்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அபூ பக்ர் அவர்கள்’ என பதிலளித்தார்கள். நான், ‘(அவர்களுக்குப்) பிறகு யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பிறகு உமர் அவர்கள் (தாம் சிறந்தவர்)’ என்று பதிலளித்தார்கள். ‘பிறகு (மக்களில் சிறந்தவர்) உஸ்மான்(ரலி) தாம்’ என்று (என் தந்தை) சொல்லிவிடுவார்களோ என நான் அஞ்சியவனாக, ‘பிறகு (மக்களில் சிறந்தவர்) நீங்கள் தாமே!’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நான் முஸ்லிம்களில் ஒருவன்; அவ்வளவு தான்’ என்று பதிலளித்தார்கள்.
Book :62

(புகாரி: 3671)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، حَدَّثَنَا جَامِعُ بْنُ أَبِي رَاشِدٍ، حَدَّثَنَا أَبُو يَعْلَى، عَنْ مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، قَالَ

قُلْتُ لِأَبِي أَيُّ النَّاسِ خَيْرٌ بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «أَبُو بَكْرٍ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ عُمَرُ»، وَخَشِيتُ أَنْ يَقُولَ عُثْمَانُ، قُلْتُ: ثُمَّ أَنْتَ؟ قَالَ: «مَا أَنَا إِلَّا رَجُلٌ مِنَ المُسْلِمِينَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.