அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்.
ஒருவர் ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அவர்களிடம் வந்து, ‘இன்னவர் – அதாவது மதீனாவின் ஆளுநர் (மர்வான் இப்னி ஹகம்) அலீ(ரலி) அவர்களை மிம்பருக்கருகில் (விரும்பத் தகாத பெயரால்) அழைககிறார்’ என்று கூறினார். ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி), ‘அவர் (அப்படி) என்ன கூறினார்?’ என்று கேட்க அம்மனிதர், ‘அபூ துராப் (மண்ணின் தந்தை) என்றுஅழைக்கிறார்கள் என்று பதிலளித்தார். இதைக் கேட்டு ஸஹ்ல்(ரலி) சிரித்துவிட்டு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் தாம் அலீ அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்கள். அலீ அவர்களுக்கு அதை விடப் பிரியமான ஒரு பெயர் எதுவும் இருந்ததில்லை’ என்று சொன்னர்கள். இந்த ஹதீஸை முழுமையாகச் சொல்லுமபடி நான் ஸஹ்ல் இப்னு ஸஅத்) அவர்களே! அது எப்படி?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: (ஒரு முறை) அலீ(ரலி) ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். பிறகு (அலீ – ஃபாத்திமா இடையே மனஸ்தாபம் ஏற்படவே) வெளியே வந்து பள்ளிவாசலில் படுத்தார்கள். (அப்போது ஃபாத்திமா அவர்களின் வீட்டுக்கு வந்த) நபி(ஸல்) அவர்கள், உன் பெரிய தந்தையின் மகன் (அலீ) எங்கே’ என்று கேட்க அவர்கள், ‘பள்ளிவாசலில் இருக்கிறார்’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், அலீ அவர்களிடம் சென்றபோது அவர்களின் மேல்துண்டு அவர்களின் முதுகிலிருந்து (தரையில்) விழுந்து விட்டிருப்பதையும் (தலையிலுள்ள) மண் அவர்களின் முதுகில் ஒட்டிக் கொண்டிருப்பதையும் கண்டு அவர்களின் முதுகிலிருந்து மண்ணைத் துடைக்கலானார்கள். அப்போது, ‘(எழுந்து) அமருங்கள், அபூ துராப் (மண்ணின் தந்தை) அவர்களே!’ என்று நபி(ஸல்) அவர்கள் இரண்டு முறை கூறினார்கள்.
Book :62
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ
أَنَّ رَجُلًا، جَاءَ إِلَى سَهْلِ بْنِ سَعْدٍ، فَقَالَ: هَذَا فُلاَنٌ، لِأَمِيرِ المَدِينَةِ، يَدْعُو عَلِيًّا عِنْدَ المِنْبَرِ، قَالَ: فَيَقُولُ: مَاذَا؟ قَالَ: يَقُولُ لَهُ: أَبُو تُرَابٍ فَضَحِكَ، قَالَ: وَاللَّهِ مَا سَمَّاهُ إِلَّا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا كَانَ لَهُ اسْمٌ أَحَبَّ إِلَيْهِ مِنْهُ، فَاسْتَطْعَمْتُ الحَدِيثَ سَهْلًا، وَقُلْتُ: يَا أَبَا عَبَّاسٍ كَيْفَ ذَلِكَ قَالَ: دَخَلَ عَلِيٌّ عَلَى فَاطِمَةَ ثُمَّ خَرَجَ فَاضْطَجَعَ فِي المَسْجِدِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيْنَ ابْنُ عَمِّكِ، قَالَتْ: فِي المَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ فَوَجَدَ رِدَاءَهُ قَدْ سَقَطَ عَنْ ظَهْرِهِ ، وَخَلَصَ التُّرَابُ إِلَى ظَهْرِهِ، فَجَعَلَ يَمْسَحُ التُّرَابَ عَنْ ظَهْرِهِ ” فَيَقُولُ: «اجْلِسْ يَا أَبَا تُرَابٍ مَرَّتَيْنِ»
சமீப விமர்சனங்கள்