ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அறிவித்தார்.
இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ஒருவர்வந்து உஸ்மான்(ரலி) அவர்களைப் பற்றிக் கேட்டார். இப்னு உமர்(ரலி) உஸ்மான்(ரலி) அவர்களின் நற்செயல்களை எடுத்துரைத்தார்கள். (பிறகு) அந்த மனிதரிடம், ‘நான் சொன்னவை உனக்கு எரிச்சலூட்டியிருக்குமே!’ என்று கூறினார்கள். (ஏனெனில் அந்த மனிதர் குறை காணும் நோக்கத்துடன் வந்திருந்தார்.) அதற்கு அந்த மனிதர், ‘ஆம்’ என்று பதிலளித்தார். இப்னு உமர்(ரலி), ‘அப்படியென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண் படியச் செய்யட்டும்’ என்று கூறினார்கள். பிறகு அந்த மனிதர் அலீ(ரலி) அவர்களைப் பற்றிக் கேட்க, இப்னு உமர்(ரலி) அலீ(ரலி) அவர்களின் நற்செயல்களைத் எடுத்துரைத்துவிட்டு, ‘அவர்கள் அவ்வாறே; அவர்களின் இல்லம் நபி(ஸல்) அவர்களின் (குடும்பத்தாரின்) வீடுகளுக்கு நடுவில் இருந்தது’ என்று கூறினார்கள். பிறகு, ‘நான் சொன்னது உனக்கு எரிச்சலூட்டியிருக்குமே!’ என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ‘ஆம்’ என்று பதிலளித்தார். இப்னு உமர்(ரலி), ‘அப்படி யென்றால் அல்லாஹ் உன் மூக்கில் மண் படியச் செய்யட்டும். போ! போய் (நான் இப்படி உண்மையைச் சொன்னதற்காக என்னை நீ தண்டிக்க விரும்பினால்) எனக் கெதிராக உன்னால் ஆனதைச் செய்’ என்று கூறினார்கள்.
Book :62
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ، عَنْ زَائِدَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، قَالَ
جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ فَسَأَلَهُ عَنْ عُثْمَانَ، فَذَكَرَ عَنْ مَحَاسِنِ عَمَلِهِ، قَالَ: لَعَلَّ ذَاكَ يَسُوءُكَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَأَرْغَمَ اللَّهُ بِأَنْفِكَ، ثُمَّ سَأَلَهُ عَنْ عَلِيٍّ فَذَكَرَ مَحَاسِنَ عَمَلِهِ، قَالَ: هُوَ ذَاكَ بَيْتُهُ، أَوْسَطُ بُيُوتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: لَعَلَّ ذَاكَ يَسُوءُكَ؟ قَالَ: أَجَلْ، قَالَ: فَأَرْغَمَ اللَّهُ بِأَنْفِكَ انْطَلِقْ فَاجْهَدْ عَلَيَّ جَهْدَكَ
சமீப விமர்சனங்கள்