தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3707

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபீ தா இப்னு அம்ர் அஸ் ஸல்மானீ(ரஹ்) அறிவித்தார்.
அலீ(ரலி) (இராக் வந்திருந்தபோது இராக் அறிஞர்களிடம் உம்முல் வலதை விற்கலாம் என்று கருத்துத் தெரிவிக்க, அதை நான் (விரும்பாத போது), ‘நீங்கள் முன்பு (உமர் – ரலி – அவர்களின் கருத்துப்படி உம்முல் வலதை விற்கக் கூடாது என்று) தீர்ப்பளித்து வாருங்கள். ஏனெனில், (மக்களிடையே சச்சரவுகளுக்குக் காரணமாய் அமையும் வகையில் அறிஞர்களுக்கிடையிலான) கருத்து வேறுபாடுகளை (பகிரங்கமாக்குவதை) நான் விரும்பவில்லை. மக்கள் அனைவரும் (ஒத்த கருத்துடைய) ஒரே குழுவினராய் ஆகும் வரை, அல்லது என் தோழர்கள் இறந்துவிட்டதைப் போல் நானும் இறந்துவிடும் வரை நான் இவ்வாறே (கருத்து வேறுபாடுகளை பகிரங்கப்படுத்த விரும்பாதவனாக) இருப்பேன்’ என்று கூறினார்கள்.
‘அலீ(ரலி) அவர்களிடமிருந்து (வந்ததாக ஷியாக்களின் மூலம் அறிவிக்கப்படுகிறவற்றில் பெரும்பாலான பொய்கள் தாம்’ என்று இப்னு சீரின்(ரஹ்) கருதுகிறார்கள்.
Book :62

(புகாரி: 3707)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ الجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ أَيُّوبَ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

«اقْضُوا كَمَا كُنْتُمْ تَقْضُونَ، فَإِنِّي أَكْرَهُ الِاخْتِلاَفَ، حَتَّى يَكُونَ لِلنَّاسِ جَمَاعَةٌ، أَوْ أَمُوتَ كَمَا مَاتَ أَصْحَابِي» فَكَانَ ابْنُ سِيرِينَ: «يَرَى أَنَّ عَامَّةَ مَا يُرْوَى عَنْ عَلِيٍّ الكَذِبُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.