தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3717

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 ஸுபைர் பின் அவ்வாம் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்களின் சிறப்புகள்.91 (ஸுபைர் – ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் (ஹவாரீ) பிரத்தியேக உதவியாளர் ஆவார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.92 (ஈசா -அலை- அவர்களின் உதவியாளர் களான) ஹவாரிய்யீன்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதற்கு,அவர்களின் ஆடைகள் வெண்மையாக இருந்ததே காரணமாகும்.
 மர்வான் இப்னி ஹகம் அவர்கள் கூறினார்.
‘சில்லு மூக்கு’ நோய் (பரவலாக ஏற்பட்ட) ஆண்டில் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களுக்கும் கடுமையான சில்லு மூக்கு இரத்த நோய் ஏற்பட்டது. எந்த அளவிற்கென்றால் அது அவர்களை ஹஜ் செய்ய விடாமல் தடுத்துவிட்டது. அவர்கள் தம் இறுதி விருப்பத்தையும் தெரிவித்து (மரண சாசனம் செய்து)விட்டார்கள். அப்போது குறைஷிகளில் ஒருவர் உஸ்மான்(ரலி) அவர்களிடம் வந்து, ‘(உங்களுக்குப் பின்) பிரதிநிதி ஒருவரை நியமியுங்கள்’ என்று கூறினார். உஸ்மான்(ரலி), ‘மக்கள் (இப்படி நியமிக்கச்) கூறினார்களா?’ என்று கேட்க அம்மனிதர், ‘ஆம்’ என்றார். ‘எவரை நியமிப்பது?’ என்று உஸ்மான்(ரலி) கேட்க, அவர் (பதில் சொல்லாமல்) மெளனமாயிருந்தார். அப்போது இன்னொரு மனிதர் வந்தார். அவர் (என் சகோதரர்) ஹாரிஸ் இப்னு ஹகம்) என்று நான் நினைக்கிறேன் – அவரும், ‘(உஸ்மான்(ரலி) அவர்களே! உங்களுக்குப் பின் ஒரு கலீஃபாவை (பிரதிநிதியை) நியமியுங்கள்’ என்று கூறினார். உஸ்மான்(ரலி), ‘மக்கள் (இப்படிக் கூறினார்களா?’ என்று கேட்க, அவர், ‘ஆம்’ என்று பதிலளித்தார். உஸ்மான்(ரலி), ‘யாரை நியமிப்பது?’ என்றுகேட்க, அந்த மனிதர் (பதில் சொல்லாமல்) மெளனமாயிருந்துவிட்டார். பிறகு உஸ்மான்(ரலி), ‘அவர்கள் ஸுபைர் அவர்களை (கலீஃபாவாக நியமிக்கச்) சொல்லியிருக்கலாம்’ என்று சொல்ல, அந்த மனிதர், ‘ஆம்’ என்று பதிலளித்தார். உஸ்மான்(ரலி), ‘என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! நான் அறிந்தவரை ஸுபைர் அவர்களே மக்களில் சிறந்தவர். (எவரை கலீஃபாவாக நியமிக்கலாம் என்று மக்கள் ஆலோசனை கூறினார்களோ) அவர்களில் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமானவர் ஸுபைர் தாம்’ என்று கூறினார்கள்.
Book : 62

(புகாரி: 3717)

بَابُ مَنَاقِبِ الزُّبَيْرِ بْنِ العَوَّامِ

وَقَالَ ابْنُ عَبَّاسٍ هُوَ حَوَارِيُّ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسُمِّيَ الحَوَارِيُّونَ لِبَيَاضِ ثِيَابِهِمْ

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: أَخْبَرَنِي مَرْوَانُ بْنُ الحَكَمِ، قَالَ

أَصَابَ عُثْمَانَ بْنَ عَفَّانَ رُعَافٌ شَدِيدٌ سَنَةَ الرُّعَافِ، حَتَّى حَبَسَهُ عَنِ الحَجِّ، وَأَوْصَى، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ مِنْ قُرَيْشٍ قَالَ: اسْتَخْلِفْ، قَالَ: وَقَالُوهُ؟ قَالَ: نَعَمْ، قَالَ: وَمَنْ؟ فَسَكَتَ، فَدَخَلَ عَلَيْهِ رَجُلٌ آخَرُ – أَحْسِبُهُ الحَارِثَ -، فَقَالَ: اسْتَخْلِفْ، فَقَالَ عُثْمَانُ: وَقَالُوا؟ فَقَالَ: نَعَمْ، قَالَ: وَمَنْ هُوَ؟ فَسَكَتَ، قَالَ: فَلَعَلَّهُمْ قَالُوا الزُّبَيْرَ، قَالَ: نَعَمْ، قَالَ: أَمَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ «إِنَّهُ لَخَيْرُهُمْ مَا عَلِمْتُ، وَإِنْ كَانَ لَأَحَبَّهُمْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.