தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3743

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார்.
நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் ‘இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக’ என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) ‘நீங்கள் எந்த ஊர்க்காரர்?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘கூஃபா வாசி’ என்றேன். அபுத்தர்தா(ரலி) ‘(நபி – ஸல் – அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?’ என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், ‘ஆம் (இருக்கிறார்)’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?’ என்று கேட்டார்… அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் ‘ஆம் (இருக்கிறார்)’ என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்… அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம் (இருக்கிறார்)’ என்று பதிலளித்தேன். அபுத்தர்தா(ரலி) ‘வல்லய்லி இதா யஃக்ஷா வந் நஹாரி இதா தஜல்லா’ என்னும் (அத்தியாயம் அல்லைலின்) வசனங்களை எப்படி ஓதினார்கள்?’ என்று கேட்க, ‘வத்தகரில் வல் உன்ஸர்’ என்று கேட்க, ‘வத்தகரி வல் உன்ஸா’ என்று (‘வ மா கலக்க’ என்னும் சொல் இல்லாமல் தான் ஓதுவார்கள் என) நான் பதிலளித்தேன். அபுத்தர்தா(ரலி), ‘(ஷாம் நாட்டினரான) இவர்கள், நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு விஷயத்தை (ஓதும் முறையை)விட்டுக் கொடுத்து விடும் படி என்னனை எச்சரிக்கிறார்கள்’ என்று கூறினார்கள்.
என இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்.
Book :62

(புகாரி: 3743)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ

ذَهَبَ عَلْقَمَةُ إِلَى الشَّأْمِ، فَلَمَّا دَخَلَ المَسْجِدَ، قَالَ: اللَّهُمَّ يَسِّرْ لِي جَلِيسًا صَالِحًا، فَجَلَسَ إِلَى أَبِي الدَّرْدَاءِ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ: مِمَّنْ أَنْتَ؟ قَالَ: مِنْ أَهْلِ الكُوفَةِ، قَالَ: أَلَيْسَ فِيكُمْ، أَوْ مِنْكُمْ، صَاحِبُ السِّرِّ الَّذِي لاَ يَعْلَمُهُ غَيْرُهُ، يَعْنِي حُذَيْفَةَ، قَالَ: قُلْتُ: بَلَى، قَالَ: أَلَيْسَ فِيكُمْ، أَوْ مِنْكُمْ، الَّذِي أَجَارَهُ اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَعْنِي مِنَ الشَّيْطَانِ، يَعْنِي عَمَّارًا، قُلْتُ: بَلَى، قَالَ: أَلَيْسَ فِيكُمْ، أَوْ مِنْكُمْ، صَاحِبُ السِّوَاكِ، وَالوِسَادِ، أَوِ السِّرَارِ؟ قَالَ: بَلَى، قَالَ: كَيْفَ كَانَ عَبْدُ اللَّهِ يَقْرَأُ: وَاللَّيْلِ إِذَا يَغْشَى وَالنَّهَارِ إِذَا تَجَلَّى، قُلْتُ: وَالذَّكَرِ وَالأُنْثَى، قَالَ: «مَا زَالَ بِي هَؤُلاَءِ حَتَّى كَادُوا يَسْتَنْزِلُونِي عَنْ شَيْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.