தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3762

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துர் ரஹ்மான் பின் யஸித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

உருவ அமைப்பிலும், நடைமுறையிலும், நபி (ஸல்) அவர்களை ஏறக்குறைய ஒத்திருக்கும் ஒரு மனிதரை நாங்கள் பின்பற்றி நடப்பதற்காக (எங்களுக்கு காட்டும்படி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்டோம். அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு உருவ அமைப்பிலும், போக்கிலும், நடத்தையிலும் கிட்டத்தட்ட ஒத்தவராக உம்மு அப்த் மகனை (அதாவது இப்னு மஸ்ஊதை) விட வேறெவரையும் நான் அறிய மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 62

(புகாரி: 3762)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ

سَأَلْنَا حُذَيْفَةَ عَنْ رَجُلٍ قَرِيبِ السَّمْتِ وَالهَدْيِ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى نَأْخُذَ عَنْهُ، فَقَالَ: «مَا أَعْرِفُ أَحَدًا أَقْرَبَ سَمْتًا وَهَدْيًا وَدَلًّا بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ابْنِ أُمِّ عَبْدٍ»


Bukhari-Tamil-3762.
Bukhari-TamilMisc-3762.
Bukhari-Shamila-3762.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




2 comments on Bukhari-3762

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      கேள்வியின் கருத்து நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்து அமல் செய்யும் நபித்தோழர் யார் என்பதாகும். அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் (தனக்கு தெரிந்த) இந்த நபித்தோழர்-இப்னுமஸ்ஊத் (ரலி) அவர்களை குறிப்பிட்டுள்ளார்கள்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.