பாடம் : 18 மாடியிலும் மேடையிலும் மரப்பலகையிலும் தொழுவது.
அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: பனிக்கட்டியின் மீதும் பாலத்தின் மீதும் தொழுவது தவறில்லை; அதற்குக் கீழே அல்லது மேலே அல்லது முன்பக்கத்தில் மூத்திரம் (போன்றவை) இருந்தாலும் சரியே! ஆனால், தொழுபவருக்கும் அந்த பாலத்திற் கும் இடையில் (அசுத்தம் சேராதபடி) தடுப்பு ஏதேனும் இருக்க வேண்டும் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கருதினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் இமாமைப் பின்தொடர்ந்து பள்ளிவாசலின் கூரை (மாடி)யில் நின்று தொழுதார்கள்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் பனிக் கட்டியின் மேல் நின்று தொழுதார்கள்.
ஸஹ்ல் இப்னு ஸஅதிடம் ‘(நபி(ஸல்) அவர்களின் பிரசங்க) மேடை எதனால் செய்யப்பட்டது?’ என்று (மக்கள்) கேட்டார்கள். அவர், ‘(இப்போது வாழும்) மனிதர்களில் இது பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் எவருமில்லை. அது ஒரு வகைக் காட்டு மரத்தினால் செய்யப்பட்டது. இன்னாருடைய அடிமையான இன்னார்தாம் அதை நபி(ஸல்) அவர்களுக்குச் செய்து கொடுத்தார். அது செய்யப்பட்டு அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டதும் அதன் மீது நபி(ஸல்) அவர்கள் நின்று கிப்லாவை முன்னோக்கி(த் தொழுகைக்குத்) தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னால் மக்களெல்லாம் நின்று தொழுதார்கள். நபி(ஸல்) அவர்கள் ஓதிவிட்டு ருகூவு செய்தார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் ருகூவு செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸுஜுது செய்தார்கள். பின்னர் மிம்பரின் மீது ஏறி நின்றார்கள். பின்னர் ருகூவு செய்தார்கள். தலையை உயர்த்திப் பின்னால் வந்து தரையில் ஸஜ்தாச் செய்தார்கள். இதுதான் அந்த மேடையின் நிலையாகும் என்றார்’ என அபூ ஹாஸிம் அறிவித்தார்.
அஹ்மத் இப்னு ஹன்பல் இந்த ஹதீஸைப் பற்றிக் கூறியபோது, ‘மக்கள் நிற்கும் இடத்தை விட உயரமான இடத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்றார்கள் என்றே இந்த ஹதீஸின் மூலம் அறிகிறேன். எனவே ஜமாஅத்தாகத் தொழும்போது இமாம் உயரமான இடத்திலும் மக்கள் தாழ்ந்த இடத்திலும் நின்ற தொழுவது தவறில்லை என்பதைத்தான் இந்த ஹதீஸின் மூலம் அறியமுடிகிறது’ என்று என்னிடம் கூறினார்’ என அலி இப்னு அப்தில்லாஹ் கூறினார்.
‘இதைப்பற்றி சுஃப்யான் இப்னு உயைனா அவர்களிடம் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றை அவரிடமிருந்து நீங்கள் செவியுறவில்லையா?’ என்று அலி இப்னு அப்தில்லாஹ், அஹ்மது இப்னு ஹன்பலிடம் கேட்டதற்கு அவர் ‘இல்லை’ என்று பதிலளித்தார்.
Book : 8
بَابُ الصَّلاَةِ فِي السُّطُوحِ وَالمِنْبَرِ وَالخَشَبِ
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَلَمْ يَرَ الحَسَنُ بَأْسًا أَنْ يُصَلَّى عَلَى الجُمْدِ وَالقَنَاطِرِ، وَإِنْ جَرَى تَحْتَهَا بَوْلٌ أَوْ فَوْقَهَا أَوْ أَمَامَهَا إِذَا كَانَ بَيْنَهُمَا سُتْرَةٌ»
وَصَلَّى أَبُو هُرَيْرَةَ: «عَلَى سَقْفِ المَسْجِدِ بِصَلاَةِ الإِمَامِ» وَصَلَّى ابْنُ عُمَرَ: «عَلَى الثَّلْجِ»
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَازِمٍ، قَالَ
سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ: مِنْ أَيِّ شَيْءٍ المِنْبَرُ؟ فَقَالَ: مَا بَقِيَ بِالنَّاسِ أَعْلَمُ مِنِّي، هُوَ مِنْ أَثْلِ الغَابَةِ عَمِلَهُ فُلاَنٌ مَوْلَى فُلاَنَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «وَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عُمِلَ وَوُضِعَ، فَاسْتَقْبَلَ القِبْلَةَ، كَبَّرَ وَقَامَ النَّاسُ خَلْفَهُ، فَقَرَأَ وَرَكَعَ وَرَكَعَ النَّاسُ، خَلْفَهُ ثُمَّ رَفَعَ رَأْسَهُ ثُمَّ رَجَعَ القَهْقَرَى، فَسَجَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ عَادَ إِلَى المِنْبَرِ، ثُمَّ رَكَعَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ القَهْقَرَى حَتَّى سَجَدَ بِالأَرْضِ»، فَهَذَا شَأْنُهُ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ عَلِيُّ بْنُ المَدِينِيِّ: ” سَأَلَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ رَحِمَهُ اللَّهُ عَنْ هَذَا الحَدِيثِ، قَالَ: فَإِنَّمَا أَرَدْتُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَعْلَى مِنَ النَّاسِ فَلاَ بَأْسَ أَنْ يَكُونَ الإِمَامُ أَعْلَى مِنَ النَّاسِ بِهَذَا الحَدِيثِ، قَالَ: فَقُلْتُ: إِنَّ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ كَانَ يُسْأَلُ عَنْ هَذَا كَثِيرًا فَلَمْ تَسْمَعْهُ مِنْهُ قَالَ: لاَ “
சமீப விமர்சனங்கள்