தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3780

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்குமிடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தியது.7
 இப்ராஹீம் இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார்.
(முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களுக்கும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) என்னும் அன்சாரித் தோழர்) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களிடம் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி), ‘நான் அன்சாரிகளில் அதிக செல்வம் உடையவன். என் செல்வத்தை இரண்டு பாதிகளாக்கிப் பங்கிட்டு நான் (ஒரு பாதியை உங்களுக்குக் கொடுத்து) விடுகிறேன். எனக்கு இரண்டு மனைவிமார்கள் உள்ளனர். அவ்விருவரில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்திருப்பவளைப் பார்த்து என்னிடம் சொல்லுங்கள். நான் அவளைத் தலாக் (மண விலக்கு) செய்து விடுகிறேன். அவளுடைய ‘இத்தா’ காலம் விடுகிறேன். அவளுடைய ‘இத்தா’ காலம் முடிந்த பின் அவ்ஃப்(ரலி), ‘அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் உங்கள் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்கட்டும். உங்கள் கடைவீதி எங்கே?’ என்று கேட்டார்கள். மக்கள் அவர்களுக்கு ‘பனூகைனுகா’ கடை வீதியைக் காட்டினார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அங்கு சென்று வியாபாரம் செய்து) தம்முடன் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றுத்தான் திரும்பினார்கள். பிறகு அடுத்த நாள் காலையும் தொடர்ந்து சென்றார்கள். (இப்படியே தொடர்ந்து சென்று வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள்.) ஒரு நாள் தம் மீது (நறுமணப் பொருள் தடவிக் கொண்டிருந்தால்) மஞ்சள் அடையாளத்துடன் (நபி – ஸல் – அவர்களிடம்) வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களை நோக்கி, ‘என்ன இது?’ என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘நான் மணம் புரிந்து கொண்டேன்’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவளுக்கு எவ்வளவு (மஹ்ர்) கொடுத்தீர்கள்?’ என்று கேட்டார்கள். அவர்கள், ‘ஒரு பேரீச்சம் கொட்டையளவு தங்கம்… அல்லது ஒரு பேரீச்சம் கொட்டையின் எடையளவு தங்கம்..’ என்று பதிலளித்தார்கள்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ‘ஒரு பேரீச்சம் கொட்டையளவு தங்கம்’ என்று கூறினார்களா, ‘ஒரு பேரீச்சம் கொட்டை எடையளவு தங்கம்’ என்று கூறினார்களா என அறிவிப்பாளர் இப்ராஹீம்(ரஹ்) சந்தேகப்படுகிறார்கள்.
Book : 63

(புகாரி: 3780)

بَابُ إِخَاءِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ المُهَاجِرِينَ، وَالأَنْصَارِ

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ

لَمَّا قَدِمُوا المَدِينَةَ آخَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَسَعْدِ بْنِ الرَّبِيعِ، قَالَ لِعَبْدِ الرَّحْمَنِ: إِنِّي أَكْثَرُ الأَنْصَارِ مَالًا، فَأَقْسِمُ مَالِي نِصْفَيْنِ، وَلِي امْرَأَتَانِ فَانْظُرْ أَعْجَبَهُمَا إِلَيْكَ فَسَمِّهَا لِي أُطَلِّقْهَا، فَإِذَا انْقَضَتْ عِدَّتُهَا فَتَزَوَّجْهَا، قَالَ: بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، أَيْنَ سُوقُكُمْ؟ فَدَلُّوهُ عَلَى سُوقِ بَنِي قَيْنُقَاعَ، فَمَا انْقَلَبَ إِلَّا وَمَعَهُ فَضْلٌ مِنْ أَقِطٍ وَسَمْنٍ، ثُمَّ تَابَعَ الغُدُوَّ، ثُمَّ جَاءَ يَوْمًا وَبِهِ أَثَرُ صُفْرَةٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْيَمْ»، قَالَ: تَزَوَّجْتُ، قَالَ: «كَمْ سُقْتَ إِلَيْهَا؟». قَالَ: نَوَاةً مِنْ ذَهَبٍ، – أَوْ وَزْنَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، شَكَّ إِبْرَاهِيمُ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.