பாடம்: 22
படுக்கை விரிப்பில் தொழுவது.
அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘நான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது’ என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 8
(புகாரி: 382)بَابُ الصَّلاَةِ عَلَى الفِرَاشِ
وَصَلَّى أَنَسٌ «عَلَى فِرَاشِهِ» وَقَالَ أَنَسٌ: «كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَسْجُدُ أَحَدُنَا عَلَى ثَوْبِهِ»
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ
«كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ، فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا»، قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ
Bukhari-Tamil-382.
Bukhari-TamilMisc-382.
Bukhari-Shamila-382.
Bukhari-Alamiah-369.
Bukhari-JawamiulKalim-372.
சமீப விமர்சனங்கள்