தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3827

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல், (நபித்துவ காலத்திற்கு முன்பு) ஏகத்துவ மார்க்கத்தைப் பற்றி விசாரித்துப் பின் பற்றுவதற்காக ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார். அப்போது யூத அறிஞர் ஒருவரைச் சந்தித்து யூதர்களின் மார்க்கதைப் பற்றி அவரிடம் விசாரித்தார். அந்த அறிஞரிடம், ‘நான் உங்கள் மார்க்கத்தை ஏற்றுப் பின்பற்றக் கூடும். எனவே, எனக்கு (அதைப் பற்றித்) தெரிவியுங்கள்’ என்று கூறினார். அதற்கு அந்த அறிஞர், ‘அல்லாஹ்வின் கோபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக் (கொண்டு அதற்காக வேதனையை அனுபவித்துக்) கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது’ என்று கூறினார். ஸைத் அவர்கள், ‘நான் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தானே வெருண்டோடி வருகிறேன்! மேலும், அல்லாஹ்வின் கோபத்தில் சிறிதளவைக் கூட ஒருபோதும் நான் தாங்க மாட்டேன். என்னால் எப்படி அதைத் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு அறிவித்துத் தரமுடியுமா?’ என்று கேட்டார். அந்த அறிஞர், ‘அது (ஏகத்துவ மார்க்கமான) நேரிய மார்க்கமாகத் தவிர இருக்க முடியாது என்பதை நான் நன்கறிவேன்’ என்று பதிலளித்தார். ஸைத் அவர்கள், ‘நேரிய மார்க்கம் என்பதென்ன?’ என்று கேட்டதற்கு அந்த அறிஞர், ‘இது இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மார்க்கம். அவர்கள் யூதராகவும் இருக்கவில்லை. கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வணங்க மாட்டார்கள்’ என்று கூறினார். (மீண்டும்) புறப்பட்டுச் சென்று கிறிஸ்தவ அறிஞர் ஒருவரைச் சந்தித்தார். அவரும் யூத அறிஞரைப் போன்றே, ‘அல்லாஹ்வின் (கருணையைவிட்டு அப்புறப்படுத்தப்படும்) சாபத்தில்விட்டு அப்புறப்படுத்தப்படும்) சாபத்தில் உனக்குள்ள பங்கை நீ எடுத்துக் கொள்ளாத வரை நீ எங்கள் மார்க்கத்தில் இருக்க முடியாது’ என்று கூறினார். ஸைத் அவர்கள், ‘அல்லாஹ்வின் சாபத்திலிருந்து தானே நான் வெரூண்டோடி வருகிறேன். அல்லாஹ்வின் சாபத்திலிருந்தும அவனுடைய கோபத்திலிருந்தும் சிறிதளவைக் கூட ஒருபோதும் நான் தாங்க மாட்டேன். (அவற்றை) எப்படி என்னால் தாங்க முடியும்? வேறெந்த மார்க்கத்தையாவது எனக்கு நீங்கள் அறிவித்துத் தருவீர்களா?’ என்று கேட்க, அதற்கு அவர், ‘நேரிய (ஏகத்துவ) மார்க்கமாகத் தான் அது இருக்குமென்பதை நான் நன்கறிவேன்’ என்று கூறினார். ஸைத் அவர்கள், ‘நேரிய மார்க்கம் என்பதென்ன?’ என்று கேட்டதற்கு அந்த அறிஞர், ‘இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கம், அவர்கள் யூதராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மேலும், அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் அவர்கள் வணங்க மாட்டார்கள்’ என்று பதிலளித்தார்கள். ஸைத் அவர்கள் அந்த அறிஞர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்க்கத்தைப் பற்றிக் கூறியதைக் கண்டபோது, (அவர்களிடமிருந்து) புறப்பட்டு வெளியே வந்ததும் தம் கைகளை உயர்த்தி, ‘இறைவா! நான் இப்ராஹீம்(அலை) அவர்களின் (ஏகத்துவ) மார்க்கத்தில் உள்ளேன் என்று உறுதி கூறுகிறேன்’ எனக் கூறினார்.
Book :63

(புகாரி: 3827)

قَالَ مُوسَى: حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، وَلاَ أَعْلَمُهُ إِلَّا تَحَدَّثَ بِهِ عَنْ ابْنِ عُمَرَ

أَنَّ زَيْدَ بْنَ عَمْرِو بْنِ نُفَيْلٍ خَرَجَ إِلَى الشَّأْمِ يَسْأَلُ عَنِ الدِّينِ، وَيَتْبَعُهُ، فَلَقِيَ عَالِمًا مِنَ اليَهُودِ فَسَأَلَهُ عَنْ دِينِهِمْ، فَقَالَ: إِنِّي لَعَلِّي أَنْ أَدِينَ دِينَكُمْ، فَأَخْبِرْنِي، فَقَالَ: لاَ تَكُونُ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ غَضَبِ اللَّهِ، قَالَ زَيْدٌ مَا أَفِرُّ إِلَّا مِنْ غَضَبِ اللَّهِ، وَلاَ أَحْمِلُ مِنْ غَضَبِ اللَّهِ شَيْئًا أَبَدًا، وَأَنَّى أَسْتَطِيعُهُ فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ، قَالَ: مَا أَعْلَمُهُ إِلَّا أَنْ يَكُونَ حَنِيفًا، قَالَ زَيْدٌ: وَمَا الحَنِيفُ؟ قَالَ: دِينُ إِبْرَاهِيمَ لَمْ يَكُنْ يَهُودِيًّا، وَلاَ نَصْرَانِيًّا، وَلاَ يَعْبُدُ إِلَّا اللَّهَ، فَخَرَجَ زَيْدٌ فَلَقِيَ عَالِمًا مِنَ النَّصَارَى فَذَكَرَ مِثْلَهُ، فَقَالَ: لَنْ تَكُونَ عَلَى دِينِنَا حَتَّى تَأْخُذَ بِنَصِيبِكَ مِنْ لَعْنَةِ اللَّهِ، قَالَ: مَا أَفِرُّ إِلَّا مِنْ لَعْنَةِ اللَّهِ، وَلاَ أَحْمِلُ مِنْ لَعْنَةِ اللَّهِ، وَلاَ مِنْ غَضَبِهِ شَيْئًا أَبَدًا، وَأَنَّى أَسْتَطِيعُ فَهَلْ تَدُلُّنِي عَلَى غَيْرِهِ، قَالَ: مَا أَعْلَمُهُ إِلَّا أَنْ يَكُونَ حَنِيفًا، قَالَ: وَمَا الحَنِيفُ؟ قَالَ: دِينُ إِبْرَاهِيمَ لَمْ يَكُنْ يَهُودِيًّا وَلاَ نَصْرَانِيًّا ، وَلاَ يَعْبُدُ إِلَّا اللَّهَ، فَلَمَّا رَأَى زَيْدٌ قَوْلَهُمْ فِي إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ خَرَجَ، فَلَمَّا بَرَزَ رَفَعَ يَدَيْهِ فَقَالَ: اللَّهُمَّ إِنِّي أَشْهَدُ أَنِّي عَلَى دِينِ إِبْرَاهِيمَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.