பாடம் : 25 கஅபாவைக் கட்டுதல்.64
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(நபியவர்களின் காலத்தில் குறைஷிகளால்) கஅபா (புதுப்பித்துக்) காட்டப்பட்டபோது நபி(ஸல்) அவர்களும் அப்பாஸ்(ரலி) அவர்களும் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அப்பாஸ்(ரலி) (சிறுவரான) நபி(ஸல்) அவர்களிடம், ‘உங்கள் வேட்டியை (கழற்றி) உங்கள் கழுத்துக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். கல்லி(ன் சுமையால் ஏற்படும் வலியி)லிருந்து அது உங்களைக் காப்பாற்றும்’ என்று கூறினார்கள். (நபி(ஸல்) அவர்கள் அப்படிச் செய்ய முனைந்த போது) அவர்கள் பூமியில் (மூர்ச்சித்து) விழுந்துவிட்டார்கள். அவர்களின் இரண்டு கண்களும் வானத்தை நோக்கியபடி நிலைகுத்தி நின்றுவிட்டன. பிறகு மூர்ச்சை தெளிந்ததும், ‘என் வேட்டி, என் வேட்டி’ என்று கேட்கலானார்கள். (வேட்டி தரப்பட்ட) உடனே அதை இறுக்கமாக கட்டிக் கொண்டார்கள்.
Book : 63
بَابُ بُنْيَانِ الكَعْبَةِ
حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ
لَمَّا بُنِيَتِ الكَعْبَةُ، ذَهَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبَّاسٌ يَنْقُلاَنِ الحِجَارَةَ، فَقَالَ عَبَّاسٌ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اجْعَلْ إِزَارَكَ عَلَى رَقَبَتِكَ يَقِيكَ مِنَ الحِجَارَةِ، فَخَرَّ إِلَى الأَرْضِ وَطَمَحَتْ عَيْنَاهُ إِلَى السَّمَاءِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ: «إِزَارِي إِزَارِي فَشَدَّ عَلَيْهِ إِزَارَهُ»
சமீப விமர்சனங்கள்