தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3832

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
‘ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்: அம்மாதங்களில்) உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று’ என (அறியாமைக் கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போரிடுதல் தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்குமாற்றி) ஸஃபருக்கு முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்கு மாற்றி) ஸஃபருக்கு முஹர்ரம் என்று பெயர் சூட்டி வந்தார்கள். (ஹஜ் பயணத்தில்) ஒட்டகங்களின் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து (ஸஃபர் மாதமும் கழிந்து)விட்டால் உம்ரா செய்ய நாடுபவருக்கு உம்ரா செய்ய அனுமதியுண்டு’ என்று கூறி வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுககாக இஹ்ராம் அணிந்து கொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எச்செயல்கள் அனுமதிக்கப்படும்?’ எனக் கேட்டனர். அதற்கு, ‘இஹ்ராம் அணிந்தவருக்கு விலக்கப்பட்டிருந்த) அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும்’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
Book :63

(புகாரி: 3832)

حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

كَانُوا يَرَوْنَ أَنَّ العُمْرَةَ فِي أَشْهُرِ الحَجِّ مِنَ الفُجُورِ فِي الأَرْضِ، وَكَانُوا يُسَمُّونَ المُحَرَّمَ صَفَرًا، وَيَقُولُونَ: إِذَا بَرَا الدَّبَرْ، وَعَفَا الأَثَرْ، حَلَّتِ العُمْرَةُ لِمَنِ اعْتَمَرْ، قَالَ: «فَقَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ رَابِعَةً مُهِلِّينَ بِالحَجِّ، وَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الحِلِّ قَالَ: «الحِلُّ كُلُّهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.