கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) ‘ஸைனப்’ என்றழைக்கப்படும் ‘அஹ்மஸ்’ குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றார்கள். அவளை (மெளன விரதம் பூண்டு) பேசாமலிருப்பவளாகக் கண்டார்கள். உடனே, ‘இவளுக்கென்ன ஆயிற்று? ஏன் பேசாமலிருக்கிறாள்?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘(இவள் ஹஜ் செய்யும் வரை) எவருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள்’ என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவளிடம், ‘நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மெளனவிரதம் பூணுவ)து அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. இது அறியாமைக் காலச் செயலாகும்’ என்று கூறினார்கள். எனவே, அவள் (மெளன விரதத்தைக் கலைத்துப் பேசினாள். ‘நீங்கள் யார்?’ என்று கேட்டாள். அபூ பக்ர்(ரலி), ‘முஹாஜிர்களில் ஒருவன்’ என்று பதிலளித்தார்கள். அப்பெண், ‘முஹாஜிர்களில் நீங்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்?’ என்று கேட்க, அபூ பக்ர்(ரலி), ‘குறைஷிகளின் குலத்தைச் சேர்ந்தவன்’ என்று பதிலளித்தார்கள். அப்பெண், ‘குறைஷிகளில் நீங்கள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?’ என்று கேட்க, அபூ பக்ர்(ரலி), ‘நீ அதிகமாகக் கேள்வி கேட்கிறாயே? நானே அபூ பக்ர்’ என்று பதிலளித்தார்கள். அப்பெண், ‘அறியாமைக் காலத்திற்குப் பிறகு எங்களிடம் வந்த இந்த (இஸ்லாம் எனும்) நல்ல நிலையில் நாங்கள் நீடித்து நிலைத்திருக்க வழி யாது?’ என்று கேட்டாள். அபூ பக்ர்(ரலி), ‘உங்கள் தலைவர்கள் உங்களைச் சீராக நிர்வகித்து வரும் வரை அதில் நீங்கள் நீடித்து நிலைத்திருப்பீர்கள்’ என்று பதிலளித்தாள் அபூ பக்ர்(ரலி), ‘அவர்கள் தாம் மக்களின் தலைவர்கள்’ என்று கூறினார்கள்.
Book :63
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ بَيَانٍ أَبِي بِشْرٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، قَالَ
دَخَلَ أَبُو بَكْرٍ عَلَى امْرَأَةٍ مِنْ أَحْمَسَ يُقَالُ لَهَا زَيْنَبُ، فَرَآهَا لاَ تَكَلَّمُ، فَقَالَ: «مَا لَهَا لاَ تَكَلَّمُ؟» قَالُوا: حَجَّتْ مُصْمِتَةً، قَالَ لَهَا: «تَكَلَّمِي، فَإِنَّ هَذَا لاَ يَحِلُّ، هَذَا مِنْ عَمَلِ الجَاهِلِيَّةِ»، فَتَكَلَّمَتْ، فَقَالَتْ: مَنْ أَنْتَ؟ قَالَ: «امْرُؤٌ مِنَ المُهَاجِرِينَ»، قَالَتْ: أَيُّ المُهَاجِرِينَ؟ قَالَ: «مِنْ قُرَيْشٍ»، قَالَتْ: مِنْ أَيِّ قُرَيْشٍ أَنْتَ؟ قَالَ: «إِنَّكِ لَسَئُولٌ، أَنَا أَبُو بَكْرٍ»، قَالَتْ: مَا بَقَاؤُنَا عَلَى هَذَا الأَمْرِ الصَّالِحِ الَّذِي جَاءَ اللَّهُ بِهِ بَعْدَ الجَاهِلِيَّةِ؟ قَالَ: «بَقَاؤُكُمْ عَلَيْهِ مَا اسْتَقَامَتْ بِكُمْ أَئِمَّتُكُمْ»، قَالَتْ: وَمَا الأَئِمَّةُ؟ قَالَ: «أَمَا كَانَ لِقَوْمِكِ رُءُوسٌ وَأَشْرَافٌ، يَأْمُرُونَهُمْ فَيُطِيعُونَهُمْ؟» قَالَتْ: بَلَى، قَالَ: «فَهُمْ أُولَئِكِ عَلَى النَّاسِ»
சமீப விமர்சனங்கள்