தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3848

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபுஸ் ஸஃபர்(ரஹ்) அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி), ‘மக்களே! நான் உங்களுக்குச் சொல்வதை என்னிடமிருந்து (காது கொடுத்து கவனமாகக்) கேளுங்கள். நீங்கள் சொல்வதை நான் (கவனமாகக்) கேட்க விடுங்கள். (என்னிடமிருந்து அரைகுறையாகக் கேட்டுக் கொண்டு) போய், ‘இப்னு அப்பாஸ் கூறினார்; இப்னு அப்பாஸ் கூறினார்’ என்று (தப்பும் தவறுமாகச்) சொல்லாதீர்கள். இறையில்லம் கஅபாவை வலம் வருபவர் ‘ஹிஜ்ர்’ என்னும் (வளைந்த) பகுதிக்கு அப்பாலிருந்து சுற்றட்டும்! ‘அல் ஹத்தீம்’ என்று (அதற்குப்) பெயர் சொல்லாதீர்கள். ஏனெனில், அறியாமைக் காலத்தில் ஒருவர் சத்தியம் செய்துவிட்டு (சத்தியம் செய்ததற்கு அடையாளமாக) தன் சாட்டையையோ, தன் செருப்பையோ, தன் வில்லையோ அங்கே போட்டு விடுவார் (எனவேதான் அதற்கு ‘ஹத்தீம்’ (வீழ்த்தக் கூடியது) என்ற பெயர் வந்தது)’ என்று சொல்வதை கேட்டேன்.
Book :63

(புகாரி: 3848)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الجُعْفِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا مُطَرِّفٌ، سَمِعْتُ أَبَا السَّفَرِ، يَقُولُ: سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ

«يَا أَيُّهَا النَّاسُ اسْمَعُوا مِنِّي مَا أَقُولُ لَكُمْ، وَأَسْمِعُونِي مَا تَقُولُونَ، وَلاَ تَذْهَبُوا فَتَقُولُوا قَالَ ابْنُ عَبَّاسٍ قَالَ ابْنُ عَبَّاسٍ مَنْ طَافَ بِالْبَيْتِ فَلْيَطُفْ مِنْ وَرَاءِ الحِجْرِ، وَلاَ تَقُولُوا الحَطِيمُ فَإِنَّ الرَّجُلَ فِي الجَاهِلِيَّةِ كَانَ يَحْلِفُ فَيُلْقِي سَوْطَهُ أَوْ نَعْلَهُ أَوْ قَوْسَهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.