தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3849

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

 அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

அத்தியாயம்: 63

(புகாரி: 3849)

حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ:

«رَأَيْتُ فِي الجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ، قَدْ زَنَتْ، فَرَجَمُوهَا، فَرَجَمْتُهَا مَعَهُمْ»


Bukhari-Tamil-3849.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-3849.
Bukhari-Alamiah-3560.
Bukhari-JawamiulKalim-3585.




  • இதில் வரும் அறிவிப்பாளர் அம்ர் பின் மைமூன் அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவர். ஆனால் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை என்பதால் இவர் நபித்தோழர் அல்ல. நபித்தோழர்களுக்கு அடுத்து உள்ள தாபீஈன்களில் உள்ளவர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/307)

எனவே இது முன்கதிஃயான அறிவிப்பாளர் தொடர் என்பதால் பலவீனமானதாகும்.

  • மேலும் இந்த செய்தியை பற்றி இப்னு அப்தில்பர் அவர்கள், விபச்சாரத்திற்கு தண்டனை தருவது என்பது விலங்குகளுக்கு இல்லை என்பதால் இது அறிஞர்களின் பார்வையில் மறுக்கப்படவேண்டிய செய்தியே என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இஸ்தீஆப்-3/282).

அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இது மறுக்கப்படவேண்டிய செய்தி என்று கூறியுள்ளார்.

  • இமாம் குர்துபீ அவர்கள் (புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் இந்த செய்தியை அறியாமைக்கால நிகழ்வுகளில் தான் பதிவு செய்துள்ளார்.) அம்ர் பின் மைமூன் அறியாமைக்காலத்தில் உள்ளவர்; ஆனால் நபி (ஸல்) அவர்களை பார்க்கவில்லை என்பதை உணர்த்துவதற்கே இந்த செய்தியை பதிவு செய்துள்ளார் என்று கூறுகிறார்.

(நூல்: அல்ஜாமிஉ லிஅஹ்காமுல் குர்ஆன்-1/442)

  • இப்னு தைமியா, இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    இப்னு குதைபா போன்றோர் விலங்குகளிடம் பல வகையான பழக்கவழக்கங்கள் உள்ளன. எனவே அவைகளிடம் இது போன்ற நிகழ்வு நடத்திருக்காது என்று உறுதியாக கூறமுடியாது. நடந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். (சுருக்கம்)

(நூல்கள்: தஃவீலுல் முக்தலஃபுல் ஹதீஸ்-255, 256, மஜ்மூஉல் ஃபதாவா-11/545, ஃபத்ஹுல் பாரீ-7/161)

  • எனவே இந்த செய்தி ஒரு தகவல்தானே தவிர இதற்கும் மார்க்க சட்டங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.