தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3851

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 நபி (ஸல்) அவர்கள் (இறைத்தூதராக) நியமிக்கப்படுதல். (இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வமிசப் பரம்பரை பற்றிய விபரமாவது:) அத்னானின் மகன் மஅத்தும், மஅத்துடைய மகன் நிஸாரும், நிஸாருடைய மகன் முளரும் முளருடைய மகன் இல்யாஸும், இல்யாஸுடைய மகன் முத்ரிகாவும், முத்ரிகாவின் மகன் குஸைமாவும், குஸைமாவின் மகன் கினானாவும், கினானாவின் மகன் நள்ரும்,நள்ரின் மகன் மாலிக்கும், மாலிக்கின் மகன் ஃபிஹ்ரும், ஃபிஹ்ரின் மகன் ஃகா-பும், ஃகா-பின் மகன் லுஅய்யும், லுஅய்யின் மகன் கஅபும், கஅபின் மகன் முர்ராவும், முர்ராவின் மகன் கிலாபும், கிலாபின் மகன் குஸய்யும், குஸய்யின் மகன் அப்து மனாஃபும், அப்து மனாஃபின் மகன் ஹாஷிமும், ஹாஷிமின் மகன் அப்துல் முத்த-பும், அப்துல் முத்த-பின் மகன் அப்துல்லாஹ்வும், அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் (ஸல்) அவர்களும் ஆவார்கள்.87
 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நாற்பது வயதுடையவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு (வஹீ எனும்) வேத வெளிப்பாடு அருளப்பட்டது. அதன் பிறகு அவர்கள் மக்கா நகரில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள். பிறகு, (இறைமார்க்கத்திற்காகத் தாயகம் துறந்து) ஹிஜ்ரத் செய்து செல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது. எனவே, அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து சென்றார்கள்; அங்கே பத்தாண்டுகள் தங்கினார்கள்; பிறகு இறப்பெய்தினார்கள்.
Book : 63

(புகாரி: 3851)

بَابُ مَبْعَثِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ المُطَّلِبِ بْنِ هَاشِمِ بْنِ عَبْدِ مَنَافِ بْنِ قُصَيِّ بْنِ كِلاَبِ بْنِ مُرَّةَ بْنِ كَعبِ بْنِ لؤَيِّ بْنِ غالِبِ بْنِ فِهْرِ بْنِ مَالِكِ بْنِ النَّضْرِ بْنِ كِنَانَةَ بْنِ خُزَيْمَةَ بْنِ مُدْرِكَةَ بْنِ إِلْيَاسَ بْنِ مُضَرَ بْنِ نِزَارِ بْنِ مَعَدِّ بْنِ عَدْنَانَ

حَدَّثَنَا أَحْمَدُ ابْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ

«أُنْزِلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ أَرْبَعِينَ، فَمَكَثَ بِمَكَّةَ ثَلاَثَ عَشْرَةَ سَنَةً، ثُمَّ أُمِرَ بِالهِجْرَةِ فَهَاجَرَ إِلَى المَدِينَةِ، فَمَكَثَ بِهَا عَشْرَ سِنِينَ، ثُمَّ تُوُفِّيَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.