பாடம் : 32
ஜின்கள் பற்றிய குறிப்பு.97
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீங்கள் சொல்லுங்கள்: எனக்கு இவ்வாறு வஹீ அனுப்பப்பட்டுள்ளது: ஜின்களில் ஒரு குழுவினர் கவனமாகக் கேட்டனர்…(72 : 1-15) 98
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஜின்கள் குர்ஆனை செவிமடுத்த இரவில், நபியவர்களை (இன்னாரென்று) அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்தவர் யார்?’ என்று நான் மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஜின்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் தாம் என்று) அவர்களை அறிவித்துக் கொடுத்தது ஒரு மரம் தான் என உங்கள் தந்தை – அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) எனக்கு அறிவித்தார்கள்’ என்று கூறினார்கள்.
Book : 63
بَابُ ذِكْرِ الجِنِّ
وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الجِنِّ} [الجن: 1]
حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ مَعْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: سَمِعْتُ أَبِي، قَالَ
سَأَلْتُ مَسْرُوقًا: «مَنْ آذَنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا القُرْآنَ؟»، فَقَالَ: حَدَّثَنِي أَبُوكَ يَعْنِي عَبْدَ اللَّهِ أَنَّهُ «آذَنَتْ بِهِمْ شَجَرَةٌ»
சமீப விமர்சனங்கள்