பாடம் : 34 சயீத் பின் ஸைத் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது.105
கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரலி) அறிவித்தார்.
‘அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் அவர்கள், நான் இஸ்லாத்தை ஏற்றதைக் கண்டித்து அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன். நீங்கள் உஸ்மான்(ரலி) விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நடந்து கொண்டதைக் கண்டு (மனம் தாளாமல்), உஹுது மலை தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்துவிட்டால் அதுவும் சரியானதே’ என்று ஸயீத் இப்னு ஸைத் இப்னு அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) கூஃபாவின் மஸ்ஜிதில் வைத்துக்கூற கேட்டேன்.
Book : 63
بَابُ إِسْلاَمِ سَعِيدِ بْنِ زَيْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ ، عَنْ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، فِي مَسْجِدِ الكُوفَةِ يَقُولُ
«وَاللَّهِ لَقَدْ رَأَيْتُنِي، وَإِنَّ عُمَرَ لَمُوثِقِي عَلَى الإِسْلاَمِ، قَبْلَ أَنْ يُسْلِمَ عُمَرُ، وَلَوْ أَنَّ أُحُدًا ارْفَضَّ لِلَّذِي صَنَعْتُمْ بِعُثْمَانَ لَكَانَ»
சமீப விமர்சனங்கள்