அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை உமர் – ரலி – அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் தம்மைக் குறைஷிகள் கொல்ல வந்தார்கள் என்று) அஞ்சியவர்களாக(த் தம்) இல்லத்தினுள் அவர்கள் இருந்தபோது, ஆஸ் இப்னு வாயில் அஸ்ஸஹ்மீ அபூ அம்ர் (எனும் குறைஷித் தலைவர்) கோடு போட்ட சால்வை ஒன்றைப் போட்டுக் கொண்டு பட்டினால் தைக்கப்பட்ட சட்டையொன்றை அணிந்து கொண்டு வந்து, ‘என்ன விஷயம்!’ என்று கேட்டார் – அவர் அறியாமைக் காலத்தில் எங்கள் நட்புக் குலமாயிருந்த ‘பனூ சஹ்கி’ குலத்தைச் சேர்ந்தவர் – உமர் அவர்கள், ‘உங்கள் குலத்தார் நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக என்னைக் கொல்ல எண்ணுகிறார்கள்’ என்று அவரிடம் சொல்ல அதற்கவர், ‘உன்னிடம் (நெருங்க அவர்களுக்கு) வழியில்லை’ என்று கூறினார். (உமர் – ரலி – கூறுகிறார்கள்:) ‘இவ்வாறு அவர் சொன்ன பிறகு நான் அமைதியடைந்தேன்.’ உடனே, ‘ஆஸ் இப்னு வாயில்’ வெளியே சென்று (மக்கா) பள்ளத்தாக்கே நிரம்பி வழியும்படி திரண்டு நின்ற மக்களைச் சந்தித்து, ‘நீங்கள் எங்கே நாடிப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். அவர்கள், ‘மதம் மாறி (நமக்கு துரோகம் செய்து)விட்ட இந்த கத்தாபின் மகனைத் தான் நாடிச் செல்கிறோம்’ என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ‘அவரிடம் (நெருங்க உங்களுக்கு) வழியில்லை’ என்று கூறினார். என்று சொல்ல, (வேறு வழியின்றி) மக்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
Book :63
حَدَّثَنِي يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدٍ قَالَ: فَأَخْبَرَنِي جَدِّي زَيْدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ قَالَ
بَيْنَمَا هُوَ فِي الدَّارِ خَائِفًا، إِذْ جَاءَهُ العَاصِ بْنُ وَائِلٍ السَّهْمِيُّ أَبُو عَمْرٍو، عَلَيْهِ حُلَّةُ حِبَرَةٍ وَقَمِيصٌ مَكْفُوفٌ بِحَرِيرٍ، وَهُوَ مِنْ بَنِي سَهْمٍ، وَهُمْ حُلَفَاؤُنَا فِي الجَاهِلِيَّةِ، فَقَالَ لَهُ: مَا بَالُكَ؟ قَالَ: ” زَعَمَ قَوْمُكَ أَنَّهُمْ سَيَقْتُلُونِي إِنْ أَسْلَمْتُ، قَالَ: لاَ سَبِيلَ إِلَيْكَ، بَعْدَ أَنْ قَالَهَا أَمِنْتُ، فَخَرَجَ العَاصِ فَلَقِيَ النَّاسَ قَدْ سَالَ بِهِمُ الوَادِي، فَقَالَ: أَيْنَ تُرِيدُونَ؟ فَقَالُوا: نُرِيدُ هَذَا ابْنَ الخَطَّابِ الَّذِي صَبَا، قَالَ: لاَ سَبِيلَ إِلَيْهِ فَكَرَّ النَّاسُ
சமீப விமர்சனங்கள்