தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3865

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
உமர்(ரலி) இஸ்லாத்தைத் தழுவியபோது மக்கள் அவர்களின் வீட்டருகே ஒன்று திரண்டு, ‘உமர் மதம் மாறிவிட்டார்’ என்று சொலலலானார்கள். அப்போது நான் சிறுவனாக என் வீட்டுக் கூரை மீது அமர்ந்து கொண்டிருந்தேன் – அப்போது ஒருவர் பட்டு அங்கி ஒன்றை அணிந்து கொண்டு வந்து, ‘உமர் மதம் மாறிவிட்டார். அதனால் என்ன? நான் அவருக்கு அபயம் அளித்திருக்கிறேன் (எனவே, அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது)’ என்று கூறினார். மக்கள் (அவர் சொன்னதைக் கேட்டு) அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டதைப் பார்த்தேன். நான், ‘யார் இவர்?’ என்று கேட்டேன். மக்கள், ‘(இவர்தான்) ஆஸ் இப்னு வாஇல்’ என்று பதிலளித்தார்கள்.
Book :63

(புகாரி: 3865)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: عَمْرُو بْنُ دِينَارٍ، سَمِعْتُهُ قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا

لَمَّا أَسْلَمَ عُمَرُ اجْتَمَعَ النَّاسُ عِنْدَ دَارِهِ، وَقَالُوا: صَبَا عُمَرُ وَأَنَا غُلاَمٌ، فَوْقَ ظَهْرِ بَيْتِي، فَجَاءَ رَجُلٌ عَلَيْهِ قَبَاءٌ مِنْ دِيبَاجٍ، فَقَالَ: قَدْ صَبَا عُمَرُ فَمَا ذَاكَ، فَأَنَا لَهُ جَارٌ، قَالَ: فَرَأَيْتُ النَّاسَ تَصَدَّعُوا عَنْهُ فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: العَاصِ بْنُ وَائِلٍ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.