கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
‘உமர் அவர்கள், நானும் அவரின் சகோதரியும் இஸ்லாத்தை எற்றதற்காக என்னைக் கட்டி வைத்(து தண்டித்)த (அனுபவத்)தை நான் கண்டிருக்கிறேன் – அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை. – உஸ்மான்(ரலி) விஷயத்தில் (அன்னாரைக் கொலை செய்து) நீங்கள் நடந்து கொண்ட (விதத்)தைக் கண்டு (மனம் தாளாமல்) உஹுது மலை தன்னுடைய இடத்தைவிட்டுப் பெயர்ந்துவிட்டால் அதுவும் சரியானதே’ என்று (கூஃபாவின் மஸ்ஜிதில் கூடியிருந்த) மக்களிடம் ஸயீத் இப்னு ஸைத்(ரலி) கூற கேட்டிருக்கிறேன்.
Book :63
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ زَيْدٍ، يَقُولُ لِلْقَوْمِ
لَوْ رَأَيْتُنِي مُوثِقِي عُمَرُ عَلَى الإِسْلاَمِ، أَنَا وَأُخْتُهُ، وَمَا أَسْلَمَ، وَلَوْ أَنَّ أُحُدًا انْقَضَّ لِمَا صَنَعْتُمْ بِعُثْمَانَ، لَكَانَ مَحْقُوقًا أَنْ يَنْقَضَّ»
சமீப விமர்சனங்கள்