தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3889

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

அன்சாரிகளின் சிறப்புகள்.

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும் (அந்த ஃபய்உ என்னும் செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு தாருல் ஹிஜ்ரத்தில் (மதீனாவில்) வாழ்ந்து கொண் டிருந்தவர்களுக்கும் (உரியதாகும்).

ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வந்திருப்பவர்களை இவர்கள் நேசிக்கின்றார்கள் என்பது மட்டு மல்ல; அவர்களுக்கு அளிக்கப்பட்டவை தங்களுக்கும் தேவையானவையே என்று மனத்தளவில் கூட அவர்கள் நினைப்ப தில்லை. (59:9)

 அப்துர் ரஹ்மான் இப்னு அப்தில்லாஹ் இப்னி அகப் (ரஹ்) கூறினார்.

கஅப் இப்னு மாலிக் (ரலி) (முதுமையடைந்து) கண்பார்வையிழந்து விட்டபோது அவர்களைக் கரம் பிடித்து அழைத்துச் செல்பவர்களாயிருந்த (அவர்களின் மகனும் என் தந்தையுமான) அப்துல்லாஹ் இப்னு கஅப் (ரஹ்) என்னிடம் கூறினார்கள்.

என் தந்தை கஅப் இப்னு மாலிக் (ரலி), தபூக் போரின்போது, நபி (ஸல்) அவர்களுடன் செல்லாமல் ((அசிரத்தை காரணமாக) தாம் பின் தங்கிவிட்ட வேளை குறித்து என்னிடம் பேசியதை நான் செவிமடுத்தேன்… என்று கூறிவிட்டு முழு ஹதீஸையும் கூறினார்கள்.

இப்னு புகைர் (ரஹ்) உகைல் (ரஹ்) வாயிலாக அறிவிக்கும் அறிவிப்பில், கஅப் இப்னு மாலிக் (ரலி) கூறுவதாக அறிவித்தார்கள்:

‘அகபா’ (எனுமிடத்தில் உறுதிமொழி அளித்த நிகழ்ச்சி நடந்த) இரவில் இஸ்லாத்தை ஏற்பதாக (மதீனாவாசிகளான) நாங்கள் பிரமாணம் செய்த வேளையில் நான் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். இதற்குப் பதிலாகப் பத்ருப் போரில் கலந்து (கொள்கிற வாய்ப்பைப் பெற்றுக்) கொள்ளுதல் எனக்கு இருந்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; ‘அல் அகபா’ பிரமாணத்தை விட ‘பத்ர்’ மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே!
Book : 63

(புகாரி: 3889)

بَابُ وُفُودِ الأَنْصَارِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ، وَبَيْعَةِ العَقَبَةِ

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ ، عَنِ ابْنِ شِهَابٍ، ح حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبٍ، وَكَانَ قَائِدَ كَعْبٍ حِينَ عَمِيَ، قَالَ: سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ يُحَدِّثُ حِينَ تَخَلَّفَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ، بِطُولِهِ. قَالَ ابْنُ بُكَيْرٍ فِي حَدِيثِهِ

وَلَقَدْ «شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ العَقَبَةِ، حِينَ تَوَاثَقْنَا عَلَى الإِسْلاَمِ، وَمَا أُحِبُّ أَنَّ لِي بِهَا مَشْهَدَ بَدْرٍ وَإِنْ كَانَتْ بَدْرٌ أَذْكَرَ فِي النَّاسِ مِنْهَا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.