தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3907

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அஸ்மா(ரலி) அறிவித்தார்.
(ஹிஜ்ரத்தின் போது) நபி(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் மதீனா செல்ல நாடிய சமயம் நான் அவர்கள் இருவருக்கும் பயண உணவைத் தயாரித்தேன். என் தந்தை (அபூ பக்ர் (ரலி)யிடம், ‘இதைக் கட்டுவதற்கு என்னிடம் என் இடுப்புக் கச்சுத் தவிர வேறெதுவும் இல்லை’ என்று சொன்னேன். அவர்கள், ‘அப்படியென்றால் அதை இரண்டாகக் கிழி’ என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்(து என் இடுப்புக் கச்சை இரண்டாகக் கிழித்துப் பயண உணவைக் கட்டி முடித்)தேன். எனவே நான், ‘இரண்டு கச்சுடையாள்’ என்று (புனைப் பெயர்) சூட்டப்பட்டேன்.
இப்னு அப்பாஸ்(ரலி) ‘அஸ்மா கச்சுடையாள்’ என்று கூறினார்கள்.
Book :63

(புகாரி: 3907)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، وَفَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ، رَضِيَ اللَّهُ عَنْهَا

صَنَعْتُ سُفْرَةً لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، حِينَ أَرَادَا المَدِينَةَ، فَقُلْتُ لِأَبِي: مَا أَجِدُ شَيْئًا أَرْبِطُهُ إِلَّا نِطَاقِي، قَالَ: فَشُقِّيهِ فَفَعَلْتُ فَسُمِّيتُ ذَاتَ النِّطَاقَيْنِ ” قَالَ ابْنُ عَبَّاسٍ أَسْمَاءُ ذَاتَ النِّطَاقِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.