தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3915

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அபூ புர்தா இப்னு அபீ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அறிவித்தார்.
என்னிடம் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ‘என் தந்தை (உமர் – ரலி – அவர்கள்) உங்கள் தந்தை (அபூ மூஸா – ரலி – அவர்கள்) இடம் என்ன கூறினார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்; என் தந்தை உங்கள் தந்தையிடம் ‘அபூ மூஸாவே! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இஸ்லாத்தை ஏற்றதும், அவர்களுடன் ஹிஜ்ரத் செய்ததும், அவர்களுடன் (சேர்ந்து) அறப்போர் புரிந்த நற்செயல்களும் (இவையெல்லாம்) நிச்சயமாகப் பலன் தரும் என்பது உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா? மேலும், நபியவர்களுக்குப் பின் நாம் புரிந்த செயல்கள் அனைத்தும் (அவற்றிலுள்ள நிறைகளும் குறைகளும்) சரிக்குச் சரி நிகராகி (இறைவனின் தண்டனையிலிருந்து) நாம் தப்பித்துக் கொள்வோம் என்பதும் (உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறதா?)’ என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தையிடம் உங்கள் தந்தை (அபூ மூஸா), ‘இல்லை; இறைவன் மீதாணையாக! நாம் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு அறப்போர் புரிந்துள்ளோம்; தொழுதுள்ளோம். நோன்பு நோற்றுள்ளோம். நற்செயல்கள் நிறையப் புரிந்துள்ளோம். மேலும், நம்முடைய கரங்களால் நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இவற்றுக்கெல்லாம் (இறைவன் நமக்குப் பிரதிபலன் அளிப்பான் என) நாம் எதிர்பார்க்கிறோம்’ என்று பதிலளித்தார்கள். உடனே என் தந்தை (உமர்,) ‘ஆனால், உமரின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! நானோ, (நபியவர்களுடன் நாம் புரிந்த நற்செயல்களான) அவற்றின் பலன் நிச்சயம் நமக்குக் கிடைக்கும் என்பதும், நபிகளாருக்குப் பின் நாம் புரிந்த செயல்கள் அனைத்தும் (அவற்றிலுள்ள நிறைகளும் குறைகளும்) சரிக்குச்சரி நிகராகி (இறைவனின் தண்டனையிலிருந்து) நாம் தப்பித்துக் கொள்வோம் என்பதும் போதும் என்றே விரும்புகிறேன்’ எனக் கூறினார்கள்.
அப்போது நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் தந்தை (உமர்) என் தந்தையை விடச் சிறந்தவர்’ என்று சொன்னேன்.
Book :63

(புகாரி: 3915)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بِشْرٍ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ

قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: هَلْ تَدْرِي مَا قَالَ أَبِي لِأَبِيكَ؟ قَالَ: قُلْتُ: لاَ، قَالَ: فَإِنَّ أَبِي قَالَ لِأَبِيكَ: ” يَا أَبَا مُوسَى، هَلْ يَسُرُّكَ إِسْلاَمُنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِجْرَتُنَا مَعَهُ، وَجِهَادُنَا مَعَهُ، وَعَمَلُنَا كُلُّهُ مَعَهُ، بَرَدَ لَنَا، وَأَنَّ كُلَّ عَمَلٍ عَمِلْنَاهُ بَعْدَهُ نَجَوْنَا مِنْهُ، كَفَافًا رَأْسًا بِرَأْسٍ؟ فَقَالَ أَبِي: لاَ وَاللَّهِ، قَدْ جَاهَدْنَا بَعْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَلَّيْنَا، وَصُمْنَا، وَعَمِلْنَا خَيْرًا كَثِيرًا، وَأَسْلَمَ عَلَى أَيْدِينَا بَشَرٌ كَثِيرٌ، وَإِنَّا لَنَرْجُو ذَلِكَ، فَقَالَ أَبِي: لَكِنِّي أَنَا، وَالَّذِي نَفْسُ عُمَرَ بِيَدِهِ، لَوَدِدْتُ أَنَّ ذَلِكَ بَرَدَ لَنَا، وَأَنَّ كُلَّ شَيْءٍ عَمِلْنَاهُ بَعْدُ نَجَوْنَا مِنْهُ كَفَافًا رَأْسًا بِرَأْسٍ، فَقُلْتُ: إِنَّ أَبَاكَ وَاللَّهِ خَيْرٌ مِنْ أَبِي


Bukhari-Tamil-3915.
Bukhari-TamilMisc-3915.
Bukhari-Shamila-3915.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.