தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3929

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 காரிஜா இப்னு ஸைத் இப்னி ஸாபித்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்திருந்த அன்சாரிப் பெண்களில் ஒருவரான (என் தாயார்) உம்முல் அலா(ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.
(மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்த) முஹாஜிர்களின் தங்குமிடத்தி(னை முடிவு செய்வதற்)காக அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்டபோது, உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களின் பெயர் எங்கள் பங்கில் வந்தது. எங்களிடம் (வந்து தங்கிய) உஸ்மான்(ரலி) நோய் வாய்ப்பட்டார். எனவே, அவருக்கு நான் நோய்க் காலப் பணிவிடைகள் செய்து வந்தேன். இறுதியில் அவர் இறந்தும்விட்டார். அவருக்கு அவரின் துணிகளால் கஃபனிட்டோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். நான் (இறந்த உஸ்மானை நோக்கி) ‘அபூ சாயிபே! அல்லாஹ்வின் கருணை உங்களின் மீது உண்டாகட்டும்! அல்லாஹ் உங்களைக் கண்ணியப்படுத்திவிட்டான் என்பதற்கு நான் சாட்சியம் பகர்கிறேன்’ என்று கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அவரை கண்ணியப்படுத்திவிட்டான் என்று உனக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டார்கள். நான், ‘எனக்குத் தெரியாது. என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும், இறைத்தூதர் அவர்களே! (அல்லாஹ் இவரை கண்ணியப்படுத்தாவிட்டால் பின்) யாரைத் தான் (கண்ணியப்படுத்துவான்)’ என்று நான் சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘இவருக்கோ மரணம் வந்துவிட்டது; அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் என்னிடம் (மறுமையில்) எப்படி நடந்து கொள்ளப்படும் என்பதே அல்லாஹ்வின் மீதாணையாக எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள். (இதைக்கேட்ட) நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இவருக்குப் பிறகு எவரையும் நான் தூய்மையானவர் என்று கூறமாட்டேன்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் தூங்கியதும் (கனவில்) உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) அவர்களுக்குரிய ஓர் ஆறு (சொர்க்கத்தில்) ஓடிக் கொண்டிருப்பதாகக் கண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைத் தெரிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது அவரின் (நற்) செயல்’ என்று கூறினார்கள்.
Book :63

(புகாரி: 3929)

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ أُمَّ العَلاَءِ، امْرَأَةً مِنْ نِسَائِهِمْ، بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَخْبَرَتْهُ

أَنَّ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ طَارَ لَهُمْ فِي السُّكْنَى، حِينَ اقْتَرَعَتِ الأَنْصَارُ عَلَى سُكْنَى المُهَاجِرِينَ، قَالَتْ أُمُّ العَلاَءِ: فَاشْتَكَى عُثْمَانُ عِنْدَنَا فَمَرَّضْتُهُ حَتَّى تُوُفِّيَ، وَجَعَلْنَاهُ فِي أَثْوَابِهِ، فَدَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: رَحْمَةُ اللَّهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ، شَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللَّهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَمَا يُدْرِيكِ أَنَّ اللَّهَ أَكْرَمَهُ»، قَالَتْ: قُلْتُ: لاَ أَدْرِي، بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، فَمَنْ؟ قَالَ: «أَمَّا هُوَ فَقَدْ جَاءَهُ وَاللَّهِ اليَقِينُ، وَاللَّهِ إِنِّي لَأَرْجُو لَهُ الخَيْرَ، وَمَا أَدْرِي وَاللَّهِ وَأَنَا رَسُولُ اللَّهِ مَا يُفْعَلُ بِي»، قَالَتْ: فَوَاللَّهِ لاَ أُزَكِّي أَحَدًا بَعْدَهُ، قَالَتْ: فَأَحْزَنَنِي ذَلِكَ، فَنِمْتُ، وفَرِيتُ لِعُثْمَانَ بْنِ مَظْعُونٍ عَيْنًا تَجْرِي، فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ، فَقَالَ: «ذَلِكِ عَمَلُهُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.