தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3932

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு (ஹிஜ்ரத் செய்து) வந்தபோது மதீனாவின் மேற்பகுதியில் ‘பனூ அம்ர் இப்னு அவ்ஃப்’ என்றழைக்கப்பட்டு வந்த ஒரு குடும்பத்தாரிடம் இறங்கி, அவர்களிடையே பதினான்கு நாள்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு ஆளனுப்பினார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்றும் முகமாக) தம் வாட்களைத் தொங்கவிட்டபடி வந்தனர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாகனத்தில் அமர்ந்திருக்க, அபூ பக்ர்(ரலி), அவர்களுக்குப் பின்னே அமர்ந்திருக்க, பனூ நஜ்ஜார் கூட்டத்தார் அவர்களைச் சுற்றிலும் குழுமியிருந்த (அந்தக் காட்சி) தனை (இப்போதும்) நான் காண்பதைப் போன்றுள்ளது. இறுதியாக, நபி(ஸல்) அவர்கள் (தம் வாகனத்தை) அபூ அய்யூப் அன்சாரி(ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் நிறுத்தினார்கள். – தொழுகை நேரம் (தம்மை) வந்தடையும் இடத்திலேயே நபி(ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள் – பிறகு நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்ப, அவர்கள் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! (பள்ளிவாசல் கட்டுவதற்காக) உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்’ என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்’ என்று பதிலளித்தார்கள். நான் உங்களிடம் சொல்பவை தாம் அந்தத் தோட்டத்தில் இருந்தன. அதில் இணைவைப்பவர்களின் மண்ணறைகள் இருந்தன. அதில் இடிபாடுகளும், சில பேரீச்ச மரங்களும் இருந்தன. எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், இணைவைப்போரின் மண்ணறை களைத் தோண்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றிச்) சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன. பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லா திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (கதவின்) இரண்டு நிலைக்கால்களாக கல்லை (நட்டு) வைத்தனர். ‘ரஜ்ஸ்’ எனும் ஒருவித யாப்பு வகைப் பாடலைப் பாடிக் கொண்டே அந்தக் கல்லை எடுத்து வரலாயினர். அப்போது அவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் இருந்தார்கள். ‘இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; எனவே, (மறுமை வெற்றிக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் உதவி செய்!’ என்று அவர்கள் பாடிக் கொண்டிருந்தார்கள்.
Book :63

(புகாரி: 3932)

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ: سَمِعْتُ أَبِي يُحَدِّثُ، حَدَّثَنَا أَبُو التَّيَّاحِ يَزِيدُ بْنُ حُمَيْدٍ الضُّبَعِيُّ، قَالَ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، نَزَلَ فِي عُلْوِ المَدِينَةِ، فِي حَيٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ، قَالَ: فَأَقَامَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَرْسَلَ إِلَى مَلَإِ بَنِي النَّجَّارِ، قَالَ: فَجَاءُوا مُتَقَلِّدِي سُيُوفِهِمْ، قَالَ: وَكَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَأَبُو بَكْرٍ رِدْفَهُ، وَمَلَأُ بَنِي النَّجَّارِ حَوْلَهُ، حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ، قَالَ: فَكَانَ يُصَلِّي حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلاَةُ، وَيُصَلِّي فِي مَرَابِضِ الغَنَمِ، قَالَ: ثُمَّ إِنَّهُ أَمَرَ بِبِنَاءِ المَسْجِدِ، فَأَرْسَلَ إِلَى مَلَإِ بَنِي النَّجَّارِ فَجَاءُوا، فَقَالَ: «يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي حَائِطَكُمْ هَذَا» فَقَالُوا لاَ وَاللَّهِ، لاَ نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ، قَالَ: فَكَانَ فِيهِ مَا أَقُولُ لَكُمْ، كَانَتْ فِيهِ قُبُورُ المُشْرِكِينَ، وَكَانَتْ فِيهِ خِرَبٌ، وَكَانَ فِيهِ نَخْلٌ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ المُشْرِكِينَ فَنُبِشَتْ، وَبِالخِرَبِ فَسُوِّيَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَ، قَالَ ” فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ المَسْجِدِ، قَالَ: وَجَعَلُوا عِضَادَتَيْهِ حِجَارَةً، قَالَ: قَالَ جَعَلُوا يَنْقُلُونَ ذَاكَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ، يَقُولُونَ: «اللَّهُمَّ إِنَّهُ لاَ خَيْرَ إِلَّا خَيْرُ الآخِرَهْ، فَانْصُرِ الأَنْصَارَ وَالمُهَاجِرَهْ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.