தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-397

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ‘சிலர் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் வந்து, ‘இதோ இறைத்தூதர் கஅபாவில் நுழைந்துவிட்டார்கள்’ என்று கூறினார்கள். இப்னு உமர் முன்னோக்கி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். அப்போது பிலால்(ரலி) இரண்டு வாசல்களுக்கிடையில் நின்றிருந்தார்.

‘கஅபாவின் உள்ளே நபி(ஸல்) அவர்கள் தொழுதார்களா?’ என அவரிடம் கேட்டதற்கு, ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு, ‘நீர் கஅபாவின் உள்ளே நுழையும்போது இடப்பக்கம் இருக்கிற இரண்டு தூண்களுக்கிடையில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வெளியே வந்து கஅபாவின் வாசலுக்கு முன்பாக நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்’ என்று பிலால்(ரலி) கூறினார்’ என முஜாஹித் அறிவித்தார்.
Book :8

(புகாரி: 397)

حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سَيْفٍ يَعْنِي ابْنَ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ مُجَاهِدًا، قَالَ

أُتِيَ ابْنُ عُمَرَ فَقِيلَ لَهُ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الكَعْبَةَ، فَقَالَ ابْنُ عُمَرَ: فَأَقْبَلْتُ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ وَأَجِدُ بِلاَلًا قَائِمًا بَيْنَ البَابَيْنِ، فَسَأَلْتُ بِلاَلًا، فَقُلْتُ: أَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الكَعْبَةِ؟ قَالَ: «نَعَمْ، رَكْعَتَيْنِ، بَيْنَ السَّارِيَتَيْنِ اللَّتَيْنِ عَلَى يَسَارِهِ إِذَا دَخَلْتَ، ثُمَّ خَرَجَ، فَصَلَّى فِي وَجْهِ الكَعْبَةِ رَكْعَتَيْنِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.