ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேத அறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலம் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறனார்கள்:
நான் நடந்துபோய்க்கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அங்கே, ‘ஹிரா’வில் என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்கு மிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைக் கண்டு நான் அச்சமடைந்தேன். உடனே நான் (வீட்டுக்குத்) திரும்பி (என் வீட்டாரிடம்) “எனக்குப் போர்த்தி விடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்” என்று சொன்னேன். (அவர்களும் போர்த்தி விட்டார்கள்.)
அப்போது அல்லாஹ், “போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக. உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக. உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக. அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக” எனும் வசனங்களை (அல்குர்ஆன்: 74:1-5) அருளினான். பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் யூனுஸ், மஃமர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் (முந்தைய ஹதீஸில் இடம்பெற்றுள்ள ‘இதயம் படபடக்க’ என்பதற்குப் பதிலாக) ‘கழுத்துச் சதைகள் படபடக்க’ என வந்துள்ளது.
அத்தியாயம்: 1
(புகாரி: 4)قَالَ ابْنُ شِهَابٍ: وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، قَالَ: وَهُوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الوَحْيِ فَقَالَ فِي حَدِيثِهِ
«بَيْنَا أَنَا أَمْشِي إِذْ سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ، فَرَفَعْتُ بَصَرِي، فَإِذَا المَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَرُعِبْتُ مِنْهُ، فَرَجَعْتُ فَقُلْتُ: زَمِّلُونِي زَمِّلُونِي » فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {يَا أَيُّهَا المُدَّثِّرُ. قُمْ فَأَنْذِرْ} [المدثر: 2] إِلَى قَوْلِهِ {وَالرُّجْزَ فَاهْجُرْ} [المدثر: 5]. فَحَمِيَ الوَحْيُ وَتَتَابَعَ
تَابَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، وَأَبُو صَالِحٍ، وَتَابَعَهُ هِلاَلُ بْنُ رَدَّادٍ، عَنِ الزُّهْرِيِّ، وَقَالَ يُونُسُ، وَمَعْمَرٌ بَوَادِرُهُ
Bukhari-Tamil-4.
Bukhari-TamilMisc-4.
Bukhari-Shamila-4.
Bukhari-Alamiah-3.
Bukhari-JawamiulKalim-3.
சமீப விமர்சனங்கள்