மூஸா இப்னு உக்பா (ரஹ்) அறிவித்தார்.
(இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புனிதப் போர்கள் குறித்து அறிவிப்புச் செய்ததற்குப் பின்னால்) இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், ‘இவை தாம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் புனிதப் போர்கள்’ என்று கூறினார்கள். அப்போது (பத்ருப்போரில் மாண்டு போன குறைஷித் தலைவர்களின் சடலங்களைக் கிணற்றில்) எறிந்துவிட்டு அவர்களை நோக்கி இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘உங்களுடைய இரட்சகன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையானதாகக் கண்டு கொண்டீர்களா?’ எனக் கேட்டார்கள் என்று (பத்ருப் போர் பற்றிய) ஹதீஸையும் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) கூறினார்:
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் சிலர், ‘இறந்த மக்களை நோக்கியா பேசுகிறீர்கள்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்டனர். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர்களிடம் நான் கூறியதை, அவர்களை விட நீங்கள் நன்கு செவியேற்பவர்களாக இல்லை’ என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்-அவர்கள் கூறுகிறார்கள்:)
குறைஷி(முஸ்லிம்)களில் (ஏதேனும் தகுந்த காரணத்தினால்) பத்ருப்போரில் கலந்து (கொள்ளாத போதிலும், பங்கெடுத்ததாகத் கருதப்பட்டு போர்ச் செல்வத்தில்) பங்கு வழங்கப்பட்டவர்கள் மொத்தம் எண்பத்தியொரு பேராகும்.
‘(போர்ச் செல்வத்தில்) குறைஷிகளின் பங்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது; நூறு பேர் இருந்தனர். ‘அல்லாஹ்வே மிக அறிந்தவன்’ என்று ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி) கூறினார்’ என்று உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) கூறுவது வழக்கம்.
Book :64
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ المُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحِ بْنِ سُلَيْمَانَ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ:
هَذِهِ مَغَازِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ الحَدِيثَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُلْقِيهِمْ «هَلْ وَجَدْتُمْ مَا وَعَدَكُمْ رَبُّكُمْ حَقًّا؟» قَالَ مُوسَى: قَالَ نَافِعٌ: قَالَ عَبْدُ اللَّهِ: قَالَ نَاسٌ مِنْ أَصْحَابِهِ: يَا رَسُولَ اللَّهِ، تُنَادِي نَاسًا أَمْوَاتًا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا قُلْتُ مِنْهُمْ»
قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «فَجَمِيعُ مَنْ شَهِدَ بَدْرًا مِنْ قُرَيْشٍ مِمَّنْ ضُرِبَ لَهُ بِسَهْمِهِ أَحَدٌ وَثَمَانُونَ رَجُلًا»، وَكَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يَقُولُ: قَالَ الزُّبَيْرُ: «قُسِمَتْ سُهْمَانُهُمْ، فَكَانُوا مِائَةً، وَاللَّهُ أَعْلَمُ»
சமீப விமர்சனங்கள்